சென்னையில் கொளுத்தும் வெயிலுக்கு ஒருவர் பலி
சென்னை:
சென்னையில் கொளுத்தும் வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாமல் இன்று 55 வயது மதிக்கத்தக்க ஒருமுதியவர் சுருண்டு விழுந்து இறந்தார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் தாக்கம் படு உக்கிரமாகவே இருக்கிறது. கடந்த 4ம் தேதி அக்னிநட்சத்திரம் தொடங்கிய அன்றும் அதற்கு மறுநாளும் மட்டுமே தமிழகத்தின் பல இடங்களிலும் மழை பெய்து,மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஆனால் அதன் பிறகு, அக்னி நட்சத்திரம் உண்மையிலேயே விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. தமிழகம் முழுவதும்நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வந்தது.
சென்னை வெப்பத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வழக்கம்போலவே இந்த ஆண்டும் சென்னை மக்களைவெயில் வாட்டியெடுத்துக் கொண்டிருக்கிறது.
சென்னை செங்குன்றத்தில் இன்று பிற்பகல் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த இந்த முதியவர், கொளுத்தும்வெயிலின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை கொண்டு போய் அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில்சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இறந்துபோன அந்த முதியவர் குறித்த விவரங்கள் ஏதும் யாருக்கும் கிடைக்கவில்லை.
சென்னையில் இந்த ஆண்டு கோடைக் காலத்தின் அதிக பட்ச வெப்பநிலையாக 110 டிகிரி பாரன்ஹீட் இன்றுபதிவானது.
இதே வெப்பநிலையோ அல்லது இதற்கும் அதிகமாகவோதான் அடுத்த இரண்டு நாட்களுக்கும் நீடிக்கும் என்றுசென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் வெயிலுக்கு 54 பேர் பலி:
இதற்கிடையே தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் வெயில் கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.
கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் சுமார் 54 பேர் வரை கொளுத்தும் வெயிலுக்குப் பலியாகிச் சரிந்துள்ளனர்.
இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 உதவித் தொகை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசுஅறிவித்துள்ளது.
ஆந்திராவின் அண்டை மாநிலமான ஒரிசா மற்றும் கர்நாடகாவும் வெயிலின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications