இடைத் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் முடிந்தது
சென்னை:
வரும் 31ம் தேதி நடைபெறும் 3 தமிழக சட்டசபை தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல்இன்றுடன் முடிவடைந்தது.
இந்த மூன்று தொகுதிகளிலும் 77 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளரும் நடிகருமான ராதாரவி, திமுக வேட்பாளர்மா.சுப்பிரமணியம், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் நந்தகோபால், மதிமுக வேட்பாளர் ப.சுப்பிரமணியம்,விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ஜேக்கப் உள்ளிட்டவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அச்சிறுப்பாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் பூவராகமூர்த்தி, திமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர்பார்வேந்தன், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எல்லப்பன் உள்ளிட்டவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல்செய்துள்ளனர்.
வாணியம்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வடிவேல், திமுக வேட்பாளர் நாகூர் ஹனீபா, இந்திய தேசிய லீக்வேட்பாளர் உள்ளிட்டவர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மூன்று தொகுதிகளிலும் திமுக சார்பிலேயே செங்கை சிவமும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். 2தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுவதால் இவரது வேட்பு மனுக்கள் ரத்து செய்யப்பட்டுவிடும். ஜெயலலிதா 4தொகுதிகளில் போட்டியிட்டதை பிரச்சனையாக்குவதற்காக இவரை திமுக நிறுத்தியுள்ளது.
இத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இன்று மட்டும் 20க்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படவுள்ளன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற வரும் 16ம் தேதிகடைசி நாளாகும்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications