இன்று சோனியாவை சந்திக்கிறார் வாசன்
சென்னை:
காங்கிரசுடன் தமாகாவை இணைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை த.மா.கா. தலைவர்ஜி.கே.வாசன் இன்று சந்தித்துப் பேசுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர்களான ரமேஷ் சென்னிதாலா மற்றும் ஆஸ்கார்பெர்னாண்டஸ் ஆகியோர் நேற்று சென்னை வந்து தமாகா தலைவர் ஜி.கே. வாசனை சந்தித்து இறுதிக் கட்டப்பேச்சுவார்த்தை நடத்தினர். த.மா.கா. நிர்வாகக் குழுவினருடனும் பேச்சுவார்த்தை நடந்தது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலம் வாய்ந்த கட்சியாக மாற்றுவதற்காகவே இந்த இணைப்பு நடக்கவுள்ளதாகவாசன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
இணைப்பு என்பது காலையில் பேசி மாலையில் முடிவெடுப்பது கிடையாது. அதற்கென சில வழிமுறைகள்உள்ளன.
இந்த இணைப்பினால் தமாகாவில் எந்தவிதமான பிளவும் வந்துவிடவில்லை. நாங்கள் சேரவுள்ள காங்கிரஸ்கட்சியிலும் எந்தவிதமான பதவியும் வேண்டும் என்றும் நாங்கள் நிர்ப்பந்தம் செய்யவில்லை.
இந்த இணைப்பினால் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே என்றார் வாசன்.
காங்கிரஸ் கட்சியுடன் இணைவதில் வாசன் தெளிவாகவே உள்ளார். இந்த இணைப்பு பற்றிய கருத்தில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை என்று ரமேஷ் சென்னிதாலா கூறினார்.
இதையடுத்து காங்கிரசுடன் தமாகாவை இணைப்பது உறுதியாகிவிட்டபோதிலும், இன்று வாசன் டெல்லிக்குச்சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்திக்கவுள்ளார். அப்போது இணைப்பு தேதி குறித்துஅறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி, தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி உள்ளிட்ட பலமுக்கியமான பதவிகளை த.மா.கா. கேட்டு வருவதால் தான் இணைப்பு தாமதமாகி வருவதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications