நெல்லை அருகே 2 கைதிகள் தப்பி ஓட்டம்
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் குழித்துறை நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து பாளையங்கோட்டை சிறைச்சாலைக்குத்திரும்பும் வழியில், போலீசாரை ஏமாற்றி விட்டு 2 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.
ராஜேஷ் மற்றும் ஸ்டீபன் லாரன்ஸ் ஆகிய இரண்டு கைதிகளும் பாளையங்கோட்டை சிறையில்அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் நேற்று விசாரணைக்காக குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர் விசாரணை முடிந்து அவர்களை நான்கு போலீசார் ஜீப் மூலம் மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்குஅழைத்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ராஜேஷும் ஸ்டீபன் லாரன்சும் திடீரென்று போலீ"ஸ் ஜீப்பிலிருந்து கீழே இறங்கி கண்ணிமைக்கும்நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் சுதாரித்துத் துரத்துவதற்கு முன்பே அவர்கள் போலீசார் கண்களிலிருந்துமறைந்து விட்டனர்.
இதையடுத்து கைதிகளைத் தப்பவிட்ட நான்கு போலீசார் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்காக இவ்வாறு சிறையிலிருந்து நீதிமன்றத்திற்குச் செல்லும்போது, கைதிகள் தப்பிப்பதைத்தடுப்பதற்காக சமீபத்தில்தான் "வீடியோ கான்பரன்ஸ்" திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கானசட்ட மசோதாவும் கடந்த வாரம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த "வீடியோ கான்பரன்ஸ்" திட்டத்தின் மூலம் நீதிமன்றங்களும் சிறைகளும் இணைக்கப்படுவதால், சிறையைவிட்டு கைதிகள் வெளியேற வேண்டிய அவசியமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications