பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி தருவோம்: இந்தியா
ஜம்மூ:
ராணுவக் குடியிருப்பின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய ஜம்மூ நகருக்கு பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் விரைந்தார்.
இந்திய-பிரான்ஸ் கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சியைப் பார்வையிட கோவாவில் இருந்த அவர்உடனடியாக சிறப்பு விமானத்தில் ஜம்மூ சென்றார். அங்கு மூத்த ராணுவ அதிகாரிகளுடன் நிலைமை குறித்துஆராய்ந்தார். முதல்வர் பரூக் அப்துல்லா, கவர்னர் சரத் சக்ஷேனாவுடனும் விவாதித்தார்.
பின்னர் தாக்குதல் நடந்த ராணுவக் குடியிருப்புக்குச் சென்ற அவர் உயிரிழந்த ராணுவத்தினரின் வீடுகளுக்குச்சென்றார். காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய அவர், இதற்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு. இதற்கு சரியான பதிலடி தக்கசமயத்தில் தரப்படும். பாகிஸ்தானை இதற்காக தண்டித்தே ஆக வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல தீவிரவாதிகளை தயார் செய்து அனுப்பும் முஷாரபின் செயல் தான் இதுஎன்றார் பெர்னாண்டஸ்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மூவரும் சம்பாவில் உள்ள பசன்தர் ஆறு வழியாக இந்தியாவுக்குள்ஊடுருவியுள்ளனர்.
இதற்கிடையே தீவிரவாதிகள் தாக்குதலைக் கண்டித்து இன்று பல்வேறு அமைப்புகள் ஜம்மூவில் பந்த் நடத்திவருகின்றன.
தீவிரவாதிகள் தாக்குதலின் விளைவாக இந்திய பங்குச் சந்தையில் பல ஷேர்களின் விலையில் பெரும் வீழ்ச்சிஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கிரிஸ்டினா ரோக்கோ இன்றுபாகிஸ்தான் செல்கிறார். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகள் தாக்குதலை அமெரிக்கா பார்த்துக் கொண்டிருக்காதுஎன்று கூறியுள்ள அவர் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தான் இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்றார்.
இதன்மூலம் பாகிஸ்தானை அமெரிக்கா நேரடியாகக் குறை கூறியுள்ளது. பாகிஸ்தானில் அதிப முஷாரபைசந்திக்கும் அவர் இந்தப் பிரச்சனை குறித்துப் பேசுவார் என்று தெரிகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையேபதற்றத்தைத் தணிக்க இவரை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இவர் இந்தியா வந்த நேரத்தில் தாக்குதல் நடத்தி தனது புத்தியைக் காட்டிவிட்டது பாகிஸ்தான்.
இந்தப் பிரச்சனை இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. லோக் சபா கூடியதும் இந்தத் தாக்குதல் குறித்துமத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பின.
இவர்களுக்கு பதிலளித்த பிரதமர் வாஜ்பாய், தீவிரவாத்தை ஒடுக்க மேலும் கடும் நடவடிக்கைள் எடுக்கப்படும். அதுகுறித்துப் பேச அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவேன் என்று அறிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications