காஞ்சிபுரம் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் தீ: 4,000 இணைப்புகள் "கட்"
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 4,000 இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன.
காஞ்சிபுரம், வணிகர் தெருவில் அமைந்துள்ள எலக்ட்ரானிக் டெலிபோன் எக்ஸ்சேஞ்சின் இரண்டாவது மாடியில்பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
எக்ஸ்சேஞ்சின் இரண்டாவது மாடியில் இருந்து வந்து கொண்டிருந்த புகையை, இரவுப் பணியில் இருந்தஊழியர்கள் பார்த்தனர்.
உடனே அங்கு சென்று பார்த்தபோது, முக்கியமான டெலிபோன் இயந்திரங்கள் மற்றும் கேபிள்கள் கருகிக்கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் ஏராளமான பொருட்கள் தீயில் கருகிசாம்பலாகின. சுமார் ரூ.1 கோடிக்கும் அதிகமான பொருட்கள் எரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தீயினால் 22 என்ற எண்ணில் தொடங்கும் சுமார் 4,000 தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.பெரியார் நகர், அய்யங்கார் குளம், உத்திரமேரூர், ஏனாத்தூர், வலாஜாபாத் போன்ற பகுதிகளில் தொலைபேசிஇணைப்புகள் செயலிழந்தன.












Click it and Unblock the Notifications