ரயில்கள் மோத இருந்த சம்பவம்: தீவிரவாதிகள் சதியே காரணம்
ஈரோடு:
ஈரோடு அருகே பெங்களூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளஇருந்தன. இந்தச் சம்பவத்திற்கு தீவிரவாதிகள் சதி காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடந்த இந்தச் சம்பவம் குறித்து பாலக்காடு பிரிவு ரயில்வே அதிகாரியானடைட்டஸ் கோட்சி சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
பெங்களூர்-தூத்துக்குடி ரயிலின் டிரைவர் சேதுமாதவன், கார்டு காளியப்பன், ஸ்டேஷன் மாஸ்டர் சாமிநாதன்,கேபின் ஊழியர் சுப்பிரமணியம் ஆகியோரிடம் டைட்டஸ் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணைநடத்தினார்.
இதற்கிடையே ஊஞ்சலூருக்கு அருகே உள்ள ஒரு கைகாட்டிக் கிளையில் உள்ள சிக்னல் விளக்குஉடைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த சிக்னல் விளக்கை மூடியிருந்த இரும்பு வலையின்ஆணி பிடுங்கப்பட்டு, சிக்னல் விளக்கு சுக்கு நூறாக நொறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இது தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கக் கூடுமோ என்கிற ரீதியில் போலீசார் விசாரிக்கஆரம்பித்துள்ளனர்.
இப்பகுதியில் சமீப காலத்தில் இரு முறை ரயில்கள் தடம் புரண்டுள்ளன. 6 மாதங்களுக்கு முன் இங்குள்ளதண்டவாளத்தின் பிஷ் பிளேட்டுகள் கழற்றப்பட்டிருந்ததால் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு நான்கு பெட்டிகள்சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் இதே பெங்களூர்-தூத்துக்குடி ரயிலில் திருப்பத்தூர் அருகே கொள்ளைநடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிக்னல் விளக்கு உடைக்கப்பட்டிருப்பதற்கும் இந்தக் கொள்ளைக்கும் தொடர்புஇருக்கும் என்ற ரீதியிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications