பாகிஸ்தான் தூதர் வெளியேற இந்தியா உத்தரவு
டெல்லி:
தூதரை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா உத்தரவிட்டுள்ளது.
இன்று பிரதமர் வாஜ்பாய் இல்லத்தில் நடந்த பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டிக் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டது.
ஆனால், இந்தியாவின் இந்தக் கோரிக்கை தூதரை வெளியேற்றுவதற்குச் சமமானது என்று பாகிஸ்தான் கருத்துத்தெரிவித்துள்ளது. மேலும் நாங்களாகவே தூதரை திரும்ப அழைக்க மாட்டோம் என்றும் அந் நாட்டு ராணுவசெய்தித் தொடர்பாளர் ரஷீத் குரேஷி கூறினார்.
இதனால் தூதரை இந்தியா வலுக்கட்டாயமாக வெளியேற்றும் என்று தெரிகிறது.
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தபோதே பாகிஸ்தானில் இருந்த தனது தூதர் விஜய்குமார்நம்பியாரை இந்தியா திரும்ப அழைத்துக் கொண்டுவிட்டது. தனது தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையையும்பாதியாகக் குறைத்தது.
பாகிஸ்தான் போக்குவரத்து விமானங்கள் இந்தியா மீது பறக்கவும் தடை விதிக்கப்பட்டது.
இப்போது பாகிஸ்தான் தூதர் அஷ்ரப் ஜகாங்கீர் குவாஷியையும் திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு இந்தியாஉத்தரவிட்டுள்ளது. இதைச் செய்ய பாகிஸ்தான் தவறினால் தூதரை இந்தியாவே வெளியேற்றும் என்று தெரிகிறது.
முதல்கட்டமாக தூதரக ரீதியில் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன் பின்னரும்பாகிஸ்தானின் செயலில் மாற்றம் வராவிட்டால் ராணுவரீதியிலான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.
தூதரை திருப்பி அனுப்புவதன் மூலம் பாகிஸ்தானுடனான உறவை இந்தியா துண்டிக்க ஆரம்பித்துள்ளது.
பாகிஸ்தான் அவசர ஆலோசனை:
தூதரை திரும்ப அழைக்க இந்தியா உத்தரவிட்டுள்ளதால் அது குறித்து விவாதிக்க பாகிஸ்தான் வெளியுறவுத்துறைஅதிகாரிகளின் அவசரக் கூட்டம் நடக்கிறது.
இதற்கிடையே இந்தியப் படைகள் தங்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.இந்தியப் படைகள் மார்ட்டர் ரக துப்பாக்கியால் தாக்கி வருவதாகவும் கூறியுள்ளது.
இந் நிலையில் இந்தியா எப்போது வேண்டுமானாலும் முழு அளவில் தாக்குதல் நடத்தலாம் என்று பாகிஸ்தான்கருதுகிறது. இதனால் வெவ்வேறு நிர்வாகப் பணிகளுக்கு அனுப்பபட்டுள்ள ராணுவ அதிகாரிகளை உடனேராணுவப் பணிக்குத் திரும்புமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications