சமஸ்கிருத வகுப்பா? ஆர்.எஸ்.எஸ். முகாமா?: கம்யூனிஸ்ட் தொண்டர்கள் தாக்கி 4 மாணவர்கள் காயம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் சமஸ்கிருத வகுப்பில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள்போதிக்கப்படுவதாகக் கூறி அதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கல்லூரிக்குள் நுழைந்துபோராட்டம் நடத்தினர்.
அப்போது கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் சமஸ்கிருத மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்கியதில் 4 மாணவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாண்டிச்சேரி அரசுப் பொறியியல் கல்லூரியில் சமஸ்கிருத பாரதி என்ற அமைப்பின் சார்பில் 10 நாள் சிறப்புசமஸ்கிருத முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், இங்கு சமஸ்கிருதம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். முகாம் நடத்தப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்ட்உள்ளிட்ட சில கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் ஆயுதங்களைக் கையாள்வது குறித்தும் விளக்கம் தரப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். கொள்கையைப் பரப்ப அரசுக் கல்லூரியை எப்படி பயன்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பியஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஸ்வநாதன் அந்தக்கல்லூரிக்குள் சென்றார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் உடன் சென்றனர்.
கல்லூரிக்குள் அந்த முகாமில் இருந்த மாணவர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டது.
அது கைகலப்பாக மாறியது. கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய தாக்குதலில் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து போலீசார் விஸ்வநாதனையும் 6 இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களையும் கைது செய்தனர்.
இது சமஸ்கிருத வகுப்பு தான் என்று பாண்டிச்சேரி பா.ஜ.க. தலைவர் ரகு சுந்தரம் கூறியுள்ளார்.
ஆனால், அது சமஸ்கிருத வகுப்பு அல்ல, மதவாதத்தைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பு. அதை எப்படிஅரசுக் கல்லூரியில் நடத்தலாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கலைநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
விசாரணை நடந்து வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications