மீண்டும் சாதனை படைத்த மாநகராட்சி மாணவர்கள்
சென்னை:
நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் மாநில அளவில் ரேங்க் பெற்றுசாதனை படைத்துள்ளனர்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளை பெருமூச்சுடன் பார்க்கும் பொது மக்கள் மாநகராட்சிப் பள்ளிகளை அலட்சியமாகப் பார்த்து வருகின்றனர்.வசதி இல்லாதவர்கள் தான் தங்கள் குழந்தைகளை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே மாநகராட்சிப் பள்ளிகள் தான் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் பல பாடங்களில் முதலிடத்தைப்பிடித்து வருகின்றன.
நேற்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தத்துவவியல் பாடத்தில் சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப் பள்ளிமாணவர்களான சங்கர் (172), ரகு (165), ராஜு (150) முதல் மூன்று இடங்களையும் பிடித்துள்ளனர்.
அதேபோல, அரசியல் விஞ்ஞானம் பாடத்தில் மதுரை சொக்கிகுளத்தில் உள்ள காக்கைப் பாடினியார் மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியைச்சேர்ந்த முத்து சவுந்தர்யன் மற்றும் மாணவி நீலவேணி ஆகியோர் முறையே 2 மற்றும் 3-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
முன்பெல்லாம் மாநகராட்சி மாணவர்கள் ரேங்க் பெறுவது என்பது வெகு அரிதான விஷயம்.
ஆனால் சமீபகாலமாக மதுரை மாநகராட்சிப் பள்ளி தொடர்ந்து சாதானை படைத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மாநகராட்சிப்பள்ளிகள் 10 வகுப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தும் சாதித்து வருகின்றன.
மாநகராட்சிப் பள்ளிகளின் தரம் முன்னேறியுள்ளதையே இது காட்டுகிறது. மேலும் இங்கு பயிலும் ஏழை மாணவ-மாணவிகளின் சாதனைதமிழகத்துக்கே பெருமை தருகிறது.
சென்னை தோற்றது:
அதே போல மெட்ராசில் தான் மிகச் சிறந்த பள்ளிகளும் கல்லூரிகளும் இருப்பது போன்ற ஒரு தோற்றமும் மிக வேகமாக பொய்யாகிவருகிறது.
சமீப காலமாக பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தான் அரசுத் தேர்வுகளில் அதிக அளவில் ரேங்க் பெற்று வெற்றி பெற்றுவருகின்றனர். பிற மாவட்ட கல்வி நிறுவனங்களிடம் சென்னை கல்வி நிறுவனங்கள் தோற்று வருகின்றன.
இந்த முறையும் பிளஸ் டூ தேர்வில் சென்னையை விட பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தான் அதிக அளவில் ரேங்க்பெற்றுத் தேறியுள்ளனர்.
முன்பெல்லாம் பத்தாவது மற்றும் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியானால் முதல் மூன்று இடங்களிலும் சென்னை மாணவ, மாணவியரேஇடம் பிடிப்பார்கள். பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் பெயரைப் பார்ப்பது அரிதிலும் அரிதாக இருக்கும். ஆனால் சிலஆண்டுகளாக இந்த நிலை மாறி வருகிறது.
சாதாரண ஊரிலிருந்து கூட ரேங்க் பெறும் அளவிற்கு பிற மாவட்ட மாணவ, மாணவியர் தேறி விட்டனர்.
பிளஸ்டூவில் மொத்தம் 26 பாடங்கள் உள்ளன. இதில் 83 மாணவ,மாணவியர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். இவர்களில் 36பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், 47 பேர் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
கல்வியில் முன்னேறும் மதுரை:
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் ரேங்க் பெற்றுள்ளனர். மொத்தம் 10 மாணவ,மாணவியர் மதுரையிலிருந்து ரேங்க் பெற்றுத் தேறியவர்கள்.
இதைத் தவிர தூத்துக்குடி, வேலாண்டிபாளையம், ஊத்தங்கரை, திருச்செங்கோடு, பாளையம்கோட்டை, ராயப்பன் பட்டி, கோவை,கும்பகோணம், ஈரோடு, திருவட்டாறு, காந்திகிராமம், மஞ்சகுப்பம், கொல்லங்கோடு என தமிழகத்தின் இண்டு, இடுக்குகளிலிருந்தும் கூடமாணவ, மாணவியர் மாநில அளவில் ரேங்க் பெற்றுள்ளனர்.
சென்னை பின்தங்குவது ஏன்?:
கல்வியில் சென்னை பின்தங்கி வருவது குறித்து அரசு உடனே ஆராய வேண்டியது அவசியம். மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் கொண்டசென்னை பின் தங்குவதில் அர்த்தமே இல்லை.
சென்னை மாவட்ட பள்ளிகளில் கடைப்பிடிக்கும் போதனை முறையில் மாற்றம் செய்யப்படவேண்டுமா அல்லது சென்னை மாணவர்களுக்கு சுதந்திரம் அதிகமாக இருப்பதால் மாணவர்களிடையே படிப்பில் ஆர்வம் குறைந்துவிட்டதா என்பதை அரசு ஆய்வு செய்து பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்.
எல்லா விஷயத்திலும் முன்னணியில் இருக்கும் தலைநகரமான சென்னை படிப்பு விஷயத்தில் பிற மாவட்டங்களுக்கு பின்னால் வருவதுநிச்சயம் வியப்புக்குரிய விஷயம்தான்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications