சென்னையில் போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்த தந்தை-மகன் கைது
சென்னை:
சென்னையைச் சேர்ந்த ஏராளமான மக்களிடமிருந்து பணம் மோசடி செய்து, போலி பாஸ்போர்ட் மூலமாகவெளிநாடுகளுக்கு அனுப்பி வந்த தந்தை மற்றும் மகனைப் போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஏழுகிணறு பகுதியில் சிலர் போலி பாஸ்போர்ட் செய்து முறைகேடாக வெளிநாடுகளுக்கு வேலைக்குஆட்கள் அனுப்பி வருவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து இணை கமிஷனர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் போலீஸ் படை அங்கு விரைந்தது.
அங்கிருந்த நாகூர் கனி மற்றும் அவரது மகன் சிக்கந்தர் ஆகியோரைக் கைது செய்து விசாரித்த போது, அவர்கள்இருவரும் போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்ததை ஒப்புக் கொண்டனர்.
அவர்களிடமிருந்து ஏராளமான போலி பாஸ்போர்ட்டுகள், போலி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் விமானபயணத்துக்குத் தேவையான ஏராளமான போலி ஆவணங்கள் ஆகியவற்றைப் போலீசார் கைப்பற்றினர்.
போலி பாஸ்போர்ட்டுகள் மற்றும் போலி சான்றிதழ்கள் தயாரிப்பவர்களைக் கண்டுபிடித்து தண்டிப்போம் என்றுசமீபத்தில் தான் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக மோசடி - 2 பேர் கைது
இதற்கிடையே சென்னையில் எம்.எம். இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் வெளிநாடுகளுக்கு வேலைக்குஅனுப்புவதாகக் கூறி மக்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் வேலைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி நூற்றுக்கணக்கான மக்களிடமிருந்துலட்சக்கணக்கான பணத்தையும் பாஸ்போர்ட்டையும் இந்த நிறுவனம் வாங்கி வைத்துக் கொண்டது.
ஆனால் அந்த மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான எந்தவிதமான ஏற்பாட்டையும் இந்த நிறுவனம்மேற்கொள்ளவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிலர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீசார் அந்நிறுவனத்தில் அதிரடிசோதனை நடத்தி, அதை நடத்தி வந்த 2 பேரைக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட்டுகளைக் கைப்பற்றி அவற்றை உரியவர்களிடம்ஒப்படைக்கும் பணியைப் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications