சென்னை துறைமுகத்தை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம்?

Subscribe to Oneindia Tamil

போர்ட் ப்ளேர்:

சென்னை உள்பட இந்தியாவில் உள்ள பல துறைமுகங்களையும் தீவிரவாதிகள் தாக்கத் திட்டமிட்டிருப்பதாக வந்ததகவலையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுகள் ஆகிய இடங்களுக்கு வரும்கப்பல்களைத் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகப் புலனாய்வுத் துறைக்குத் தகவல் கிடைத்தது.

கப்பல்களில் வரும் பயணிகளைக் கூண்டோடு அழிக்கவே தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் சென்னை, கொல்கத்தா, விசாகப்பட்டினம் மற்றும் போர்ட் பிளேர் ஆகிய நகரங்களில் உள்ளதுறைமுகங்களைத் தகர்க்கவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் புலனாய்வுத் துறைக்குத் தகவல்கிடைத்துள்ளது.

இதையடுத்து இந்தத் துறைமுகங்கள் மட்டுமில்லாமல் நாட்டில் உள்ள அனைத்துத் துறைமுகங்களிலும் பாதுகாப்புஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்தியத் துறைமுகங்களுக்கு வந்து கொண்டிருக்கும் அனைத்துக் கப்பல்களுக்கும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவற்படையைச் சேர்ந்தஹெலிகாப்டர்கள் துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களைப் பாதுகாப்புடன் கொண்டு வருவதற்காகஅனுப்பப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+