வாஜ்பாய் காஷ்மீர் பயணம்: சோனியாவுடன் ஆலோசனை
டெல்லி:
எல்லையின் நிலவரம் குறித்து நேரில் அறிந்து வர பிரதமர் வாஜ்பாய் அடுத்த வாரம் காஷ்மீர் செல்கிறார்.
மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக அரசு எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள விவரங்கள் குறித்து இன்று காலை வாஜ்பாய்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்.
வாஜ்பாயின் இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அத்வானியும் கலந்து கொண்டார்.
பாகிஸ்தான் மீது ராணுவரீதியில் நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
காஷ்மீர் செல்லும் வாஜ்பாய் தாக்குதல் நடந்த ராணுவ குடியிருப்புக்கும் செல்வார். காஷ்மீரில் அவர் இரண்டுநாட்கள் தங்கியிருந்து எல்லைப் பகுதி ராணுவப் படையினரைச் சந்தித்து ஆலோசனை நடத்துவார்.
இதையடுத்து அடுத்த வாரம் ஓய்வுக்காக அவர் குலுமணாலி செல்லவிருந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பாகிஸ்தான் தூதர் அஷ்ரப் ஜஹாங்கீர் குவாசி ஒரு வாரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறவேண்டும் எனறு அரசு எழுத்துப்பூர்வமாக நேற்றிரவு ஆணை பிறப்பித்தது.
இந்த உத்தரவு பாகிஸ்தானின் துணைத் தூதரிடம் இந்திய வெளியுறவுத்துறை வழங்கியது. அவரை இந்தியவெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வரவழைத்து அந்த ஆணை தரப்பட்டது.
இதற்கிடையே எல்லைப் பகுதி கிராமங்ளில் வசித்து வந்த 12,000 மக்கள் பாதுகாப்பான இடங்ளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
எல்லையில் இந்திய-பாகிஸ்தானியப் படைகள் இடையிலான சண்டை வலுத்துள்ளது. முதலில் துப்பாக்கிகள், கனரகதுப்பாக்கிகளால் தாக்கிக் கொண்ட இரு தரப்பினரும் இப்போது பீரங்கிகளால் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications