பிளஸ் டூ: சாதனை மாணவி சாவு
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஒரு மாணவி பிளஸ் டூ தேர்வில் 1085 மதிப்பெண்கள் எடுத்து தன்னுடையபள்ளியிலேயே கணிதப் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் எடுத்த ஒரே மாணவி என்ற சாதனை படைத்துள்ளார்.ஆனால் அதை நினைத்து சந்தோஷமடைய அவர் இப்போது உயிருடன் இல்லை.
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் படித்து வந்தவர் நிவேதிதா லட்சுமி. சில காலமாகநோய்வாய்ப்பட்டிருந்த லட்சுமி, அந்த நிலையிலும் பிளஸ் டூ தேர்வை சிறப்பாக எழுதினார்.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டலட்சுமி தேர்வு முடிவுகள் வருவதற்கு ஒரு நாள் முன்பு பரிதாபமாக இறந்தார்.
அடுத்த நாள் வெளியான தேர்வு முடிவில் நிவேதிதா லட்சுமி 1085 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். கணக்கில் 200மதிப்பெண்கள் பெற்றிருந்தார். பள்ளியில் கணிதத்தில் சதம் போட்டது இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மாவட்ட அளவில் அவர் 2-வது ரேங்க் பெற்றிருந்தார்.
இந்தச் சாதனை சந்தோஷத்தைக் கொண்டாட வழியில்லாமல் போய் விட்டதை எண்ணி பெரும் சோகத்தில்மூழ்கியுள்ளனர் லட்சுமியின் பெற்றோர்.












Click it and Unblock the Notifications