ஓலைச் சுவடிகளை புத்தகங்களாக்கும் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம்
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகம் தமிழ், சமஸ்கிருதம், மராட்டி போன்ற பல மொழிகளில் இருக்கும் ஓலைச்சுவடிமற்றும் கையெழுத்துச் சுவடிகளில் உள்ள விவரங்களை புத்தகங்களாக பதிப்பிக்க உள்ளது. சுமார் 300 தலைப்புகளில் இந்தநூல்கள் வெளிடப்பட உள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியரும், நூலக இயக்குநருமான சி. கோசலராமன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வல்லுநர் குழு கூடி முன்னுரிமை அடிப்படையில் பதிக்கப்பட வேண்டிய நூல்களை தேர்ந்தெடுத்துள்ளனர். நூலகத்தில் உள்ளஅறிஞர்களைத் தவிர்த்து கூடுதலாக 100 அறிஞர்களிடம் பதிப்பு பணிக்கு ஒத்துழைப்பு கேட்டுள்ளோம். இதில் 84 அறிஞர்கள்இதுவரை ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறியுள்ளனர்.
மொத்தமாக 300 தலைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் 21 தலைப்புக்கள் புத்தகங்களை அச்சிடும் பணிதொடங்கிவிட்டன. இவற்றில் 11 நூல்கள் தமிழிலும் 6 நூல்கள் சமஸ்கிருதத்திலும், ஆங்கிலம், தெலுங்கு, மோடி மற்றும் மராத்திஆகிய மொழிகளிலும் தலா ஒரு நூலும் அடங்கும்.
தற்போது அச்சில் உள்ள நூல்கள் மன்னர் சரபோஜி பிறந்த தினமான செப்டம்பர் 24ஆம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளது.
சரஸ்வதி மஹால் நூலகத்திற்கான இணைய தளத்தை உருவாக்கும் பணியை C-DAC நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்தஇணைய தளத்தில் நூலக வரலாறு, சுவடிகள் சேகரிப்பு, நூலக வெளியீடுகள் மற்றும் அவற்றின் பட்டியல் போன்றவைஅடங்கியுள்ளன. 110 பக்கங்களுடன் இரண்டரை லட்ச ரூபாய் செலவில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த தளம் விரைவில்தொடங்கப்படும்.
நூலகத்தில் உள்ள நூல்கள் மற்றும் சுவடிகளின் அட்டவணையை கணினிமயமாக்க 50,000ரூபாய் செலவில் குஜராத்பல்கலைக்கழகத்திலிருந்து சாஃப்ட்வேர் வாங்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 ரூபாய் செலவில் 124 புதிய நூல்கள்வாங்கப்பட்டுள்ளன. இன்னும் 1 லட்ச ரூபாய்க்கு நூல்கள் வாங்கும் திட்டமும் உள்ளது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான நூல்களும்வாங்கப்படும்.
நூலகத்தில் தீ தடுப்பு சாதனங்கள் 40 இடங்களில் பொருத்தப்பட உள்ளன. இந்த பணி இன்னும் 15 நாட்களில் நிறைவடையும்என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications