இன்னொரு போலி நிதி நிறுவனம் ரூ. 7 கோடி மோசடி: மீண்டும் ஏமாந்த மக்கள்
சென்னை:
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் நூற்றுக்கணக்கான போலி நிதி நிறுவனங்களில் பணத்தைப் போட்டுகோடிக்கணக்கில் அதை இழந்தனர் மக்கள்.
இந் நிலையில் சென்னையில் இன்னொரு நிதி நிறுவனம் பொது மக்களிடம் ரூ. 7 கோடி வரை மோசடி செய்துள்ளது.
சென்னை தியாகராய நகர் நானா தெருவில் உள்ளது பாலக்காடு பெனிபிட் பன்ட் எனப்படும் நிதி நிறுவனம். இந்த நதி நறுவனத்தில்கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். சென்னையைத் தவிர பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இதில்முதலீடு செய்துள்ளனர்.
இங்கு முதலீடு செய்து முதிர்வுக் காலம் வந்த வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை திரும்பக் கேட்டபோது, திருப்பித் தரமுடியாது என்று நிறுவனத்தினர் கூறியுள்ளனர். இதையடுத்து முதலீடு செய்தவர்கள் இங்கு முறுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸாருக்கும் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர்.
பாது மக்களிடம் இருந்து மொத்தம் 7 கோடி வரை இந்த நிறுவனம் வசூல் செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பணம் அனைத்தும்மோசடி செய்யப்பட்டு விட்டதாக முதலீட்டு செய்த மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். போலி நிதி நிறுவனங்களிடம் மக்கள் பல கோடிகளை இழந்துள்ள நிலையில்மீண்டும் அதில் போய் ஏன் பணத்தைப் போட அதிக வட்டி கிடைக்கும் என்ற பேராசைய காரணம். இந்தப் பேராசையால்மொத்தமாக பணத்தை இழந்து வருகின்றனர்.
இது போன்ற மோடி நிறுவனங்களை நடத்த போலீசார் ஏன் அனுமதிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.
இன்னும் எத்தனை காலம்தான் இதுபோன்ற மோசடி நிறுவனங்களிடம் முதலீடு செய்து ஏமாறப் போகிறார்களோ?
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications