மாஜி அமைச்சர் சகோதரி வீட்டில் அதிரடி சோதனை
நாகர்கோவில்:
முன்னாள் திமுக அமைச்சரான சுரேஷ் ராஜனுடைய சகோதரி வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர்சோதனை நடத்தினர்.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ் ராஜன்.
கடந்த மார்ச் 15ம் தேதி தமிழகம் முழுவதிலும் முன்னாள் அமைச்சர்களான பொன்முடி, சமயநல்லூர் செல்வராஜ்,மதுரை மாநகர முன்னாள் மேயர் குழந்தைவேலு ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனைநடத்திய போது சுரேஷ் ராஜனுடைய வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று நாகர்கோவிலில் உள்ள சுரேஷ் ராஜனுடைய சகோதரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர்சோதனை நடத்தினர்.
இன்று அதிகாலையிலேயே தொடங்கிய இந்தத் திடீர்ச் சோதனை பிற்பகலுக்கும் மேல் நீடித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுரேஷ் ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
பழிவாங்கும் நோக்கத்திலேயே அதிமுக அரசு என் சகோதரி வீட்டில் சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசாரைஏவியுள்ளது.
ஏற்கனவே என் வீட்டில் நடந்த சோதனையின் போதே எந்த ஆவணமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.இப்போதும் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது.
இந்தப் போலீசார் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்ததால் சோதனை செய்ய வந்தவர்கள் மாதிரியேதெரியவில்லை. சோதனை செய்கிறோம் என்ற பேரில் வீட்டிலுள்ள பல சுவர்களையும் இடித்துச்சேதப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சேதத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு தமிழக அரசுக்கு எதிராக நான் வழக்கு தொடர்வேன் என்றார் சுரேஷ் ராஜன்.












Click it and Unblock the Notifications