அமைச்சரானாலும் கீழே எந்த வேலையும் செய்ய முடியலை.. ஓப்பனாக குமுறிய அமைச்சர் சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: தவெக ஆட்சிக்கு வந்து 2 மாதங்களாகிவிட்டது. முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் பொது இடங்களில் பேசுவது சர்ச்சையாகி வருகிறது. அறிவித்த திட்டங்களை விட, அறிவிக்காத சர்ச்சைகளே அதிகம் உள்ளன. தவெகவுக்கு அரசு நிர்வாகம் செய்ய தெரியவில்லை என்று திமுக, அதிமுக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நாங்கள் அமைச்சரானாலும் கீழே எந்த பணியும் செய்ய முடியவில்லை என்று அமைச்சர் சரத்குமார் வெளிப்படையாக மேடையில் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் நடந்த தவெக நிகழ்ச்சியில் பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார், "நாம் ஆட்சியமைத்து 55 நாட்களுக்கு மேலாகிறது. எதிர்க்கட்சிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எந்த விஷயத்தை எதிர்த்து இவர்களை எதிர்த்து போராடுவது என்று புரியாமல் குறைகளை சொல்லி கொண்டிருக்கிறார்கள். தலைவர் ஆட்சியமைந்தவுடன் முதலில் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதில் கையெழுத்திட்டார்.

Sarathkumar

கீழே வேலை செய்ய முடியலை

அடுத்தகட்டமாக பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்காக சிங்க பெண்கள் பாதுகாப்பு படையை உருவாக்கினார். அதற்கு முன்பு ஒயின்ஷாப்பில் இரவு 10 மணிக்கு மேல் பிளாக்கில் சரக்கு விற்று கொண்டிருந்தனர். நம் ஆட்சியில் அதையெல்லாம் செய்ய முடிவதில்லை. சரியான நேரத்தில் கடையை திறந்து, சரியான நேரத்தில் மூடுகிறார்கள். எந்த அரசு அலுவலகத்திலும் லஞ்சம் கேட்பதில்லை. முதலமைச்சரே எங்காவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள்.

உங்களுடன் நான் இருக்கிறேன் என்று ஓப்பனாக கூறியுள்ளார். அந்த மாதிரியான ஆட்சி தான் தமிழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் என்னதான் எம்எல்ஏ ஆனாலும், அமைச்சரானாலும் கீழே மக்கள் பணிகளை செய்ய முடிவதில்லை. அங்க இருக்கிற ஒன்றிய கவுன்சிலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கீழே இருந்து மேலே உள்ள எங்களை பணி செய்ய விடுவதில்லை.

அதிகாரிகளை தடுக்கிறார்கள்

அரசு அதிகாரிகளையும் பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். வருகிற உள்ளாட்சி தேர்தலில் தவெக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அப்போதுதான் தலைவரின் திட்டங்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேரும்" என்றார். சரத்குமாரின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+