பாக். ராணுவம் பயங்கரத் தாக்குதல்: 3 இந்திய கிராமங்கள் நாசம்
ஜம்மூ:
நேற்று இரவு முதல் ஜம்மூ அருகே உள்ள எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரமான மோர்ட்டர் ரககுண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதில் 3 இந்தியக் கிராமங்களில் உள்ள 70 வீடுகள் அடியோடு எரிந்து சாம்பலாயின.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் பாகிஸ்தான் படையினர் நேற்றிரவுகடுமையான தாக்குதலை நடத்தினர்.
மோர்ட்டர் ரக பீரங்கிகள் மூலம் பாகிஸ்தான் படையினர் கடுமையான ஷெல் தாக்குதல் நடத்தினர். இதில் ஜம்மூஅருகே உள்ள 3 கிராமங்களில் உள்ள 70 வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.
மேலும் ஹரி நகர் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களும் பாகிஸ்தானின் இந்த மோர்ட்டார் ரக குண்டுத்தாக்குதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. விடிய விடிய நடந்த இந்தத் தாக்குதலின் போது சுமார் 2,000முறை பாகிஸ்தான் படையினர் இந்த ரகக் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
நேற்று பகல் நடந்த தாக்குதலில் ஒரு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் கொல்லப்பட்டார்.
இந்த 50 கிராமங்களைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளையும் கால்நடைகளையும்அங்கேயே விட்டு விட்டு பாதுகாப்பான இடம் நோக்கிச் சென்று விட்டனர்.
இதற்கிடையே மணிஹரி மற்றும் பாஞ்ச்கன் கிராமங்களில் உள்ள 20 வீடுகளும் பாகிஸ்தான் தாக்குதலால் எரிந்துகொண்டிருக்கின்றன.
பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இந்தியப் படையினரும் தற்போது பதிலடித்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். வேறு சேத மதிப்பு குறித்து தகவல் ஏதும் இதுவரை இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications