பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபடுவோம்: சோனியா
டெல்லி:
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று பட்டு நிற்பதால்,உடனடியாக பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதலை மத்திய அரசு தொடுக்க வேண்டும் என்று அகில இந்தியகாங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி கூறினார்.
டெல்லியில் இன்று கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒருநாள் கூட்டத்தில் அவர் கூறியதாவது:
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியர்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டுவந்துள்ளோம் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார வேறுபாடுகளைக் கொண்டிருந்தபோதிலும் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நாம் ஒன்று கூடி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடியே ஆகவேண்டும்.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்திய அரசு எடுக்கும்அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் ஆதரவளிக்கும்.
காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நாம் இப்போது பொறுப்புணர்வுடன் பயங்கரவாதத்திற்குஎதிராக ஒரு சரியான நடவடிக்கையை எடுத்தே தீர வேண்டும். அதன் மூலம் பாகிஸ்தானுக்கு நல்ல பாடம் புகட்டவேண்டும்.
எல்லையில் ராணுவத்தை எச்சரித்து, அவ்வழியாக ஊடுருவும் தீவிரவாதிகளை முதலில் தடுத்து நிறுத்த மத்திய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு இதுவரை உறுதியான முடிவு எதையும் அறிவிக்கவில்லைஎன்பது வருந்தத்தக்கது.
இந்தியா கேட்டுள்ள 20 தீவிரவாதிகளை பாகிஸ்தான் இதுவரை ஒப்படைக்கவில்லை. தீவிரவாத செயல்களையும்அந்நாடு நிறுத்திக் கொள்ளவில்லை.
இவை தொடர்பாக அந்நாட்டு ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கடந்த ஜனவரி 12ம் தேதி பேசியபேச்சுக்கள் வெறும் பேச்சளவில் மட்டுமே உள்ளன.
1972 சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1999 லாகூர் ஒப்பந்தம் ஆகியவற்றை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ்.போன்ற அமைப்புகள் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கிறோம் என்றார் சோனியா.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications