தீவிரவாதிகளை தடுக்க ராணுவத்துக்கு முஷாரப் உத்தரவு?
இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் நுழைவதைத் தடுக்குமாறு தனது 10வது கார்ப்ஸ் படைப் பிரிவுக்கு பர்வேஸ்முஷாரப் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்காவின் நெருக்குதல் காரணமாக இந்த நடவடிககைையை முஷாரப் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தீவிரவாதிகளைத் தடுக்காவிட்டால் பாகிஸ்தானைத் தாக்கத் தயங்கவே மாட்டோம் என அமெரிக்காவிடம்இந்தியா மிகத் தெளிவாகக் கூறிவிட்டது. தீவிரவாதிகளை தடுத்தால் மட்டுமே இந்தியப் படைகள்எல்லையைவிட்டு விலகும் எனவும் கூறிவிட்டது இந்தியா.
இதை பாகிஸ்தானிடம் எடுத்துச் சொன்ன அமெரிக்கா, தீவிரவாதிகளை தடுக்க நெருக்குதல் தந்துள்ளது. மேலும்ரஷ்ய அதிபர் புடின் மூலமாகவும் அமெரிக்காவிடம் இந்தியா தனது நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளது.
இதையடுத்து இந்தியத் தாக்குதலை தவிர்க்க இந்த நடவடிக்கைகளில் முஷாரப் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாக் ஏவுகணை சோதனை: அமெரிக்கா அதிருப்தி
இதற்கிடையே பாகிஸ்தான் நடத்தியுள்ள இரண்டாவது ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்க அதிப் ஜார்ஜ் புஷ்கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இப்போது ரஷ்யாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்த ஏவுகணைச் சோதனைகள் இப்போதுள்ள நிலைமையை மேலும் மோசமாக்கும். இதை சோதனைகளைஇந்தியா பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இந்த ஏவுகணைச் சோதனைகளை இந்தியா பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று பிரதமர் வாஜ்பாய்ஏற்கனவே கூறிவிட்டார்.
பாகிஸ்தானுக்கு யார் ஏவுகணை தருவது, அதன பலம் என்ன என்பது குறித்து இந்தியாவுக்கு நன்றாகவே தெரியும்.இந்த ஏவுகணைகள் மாதிரி பல மடங்கு அதிக சக்தி கொண்ட ஏவுகணைகள் இந்தியாவிடம் உள்ளன. இதுபாகிஸ்தானுக்கும் தெரியும். இப்போது நடத்தப்படும் சோதனைகள் பாகிஸ்தான் நாட்டு மக்களைசந்தோஷப்படுத்தவும் அவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தவும் தான் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications