இந்தியாவுக்கு போர் பயிற்சி விமானங்கள் தர பிரிட்டின் மறுப்பு
லண்டன்:
இந்தியா-பாகிஸதான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருப்பதால் இந்தியாவுக்கு போர் பயிற்சிவிமானங்களை விற்கவிருந்தை இங்கிலாந்து ரத்து செய்துள்ளது.
ஹாக் ரக போர் பயிற்சி விமானங்கள் வாங்க இங்கிலாந்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.பிரான்ஸ், ரஷ்யா, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் இந்த ரக விமானங்களைத் தர முன் வந்திருந்த நிலையில்இங்கிலாந்திடம் இருந்து அதை வாங்க இந்தியா முடிவு செய்தது.
இந்த பயிற்சி விமானங்கள் இல்லாததால் இந்திய விமானப்படை விமானிகள் நேரடியாக மிக் ரக விமானங்களில்பயிற்சி எடுத்து வருகின்றனர். மிகச் சிறிய விமானங்களை ஓட்டிவிட்டு திடீரென மிக் ரக விமானங்களை இயக்கபைலட்கள் நிர்பந்திக்கப்படுவதால் அவர்கள் பெருமளவில் விபத்துகளைச் சந்தித்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மிக் விமானங்களை இந்தியா இழந்துவிட்டது. பல நல்லவிமானிகளையும் இந்தியா இழந்துவிட்டது.
இதனால் பயிற்சி விமானங்கள் வேண்டும் என இந்திய விமானப் படை பல முறை மத்திய அரசை வலியுறுத்தியும்கடந்த 16 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.
இப்போது தான் இங்கிலாந்திடம் இருந்து ஹாக் ரக பயிற்சி விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் நேரடியாக பிரதமர் வாஜ்பாயிடம் பேசி தனது நாட்டு விமானங்களை வாங்கவலியுறுத்தினார். இதையடுத்து அந் நாட்டிடம் இருந்து 66 விமானங்கள் வாங்க இந்தியா பேச்சு நடத்தி வருகிறது.விலையை முடிவு செய்யும் இறுதிக் கட்டத்தில் அந்த பேச்சுவார்த்தை உள்ளது.
இந்த 66 விமானங்களுக்காக 1 பில்லியன் பவுண்டுகளை இந்தியா வழங்கவுள்ளது.
இந் நிலையில் இந்தியாவுக்கு இப்போது இந்த விமானங்களைத் தர வேண்டாம் என பாதுகாப்புத்துறைக்குபிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டுள்ளதாக த இன்டிபென்டன்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.
ஆனால், இதை இங்கிலாந்து காலையில் மறுத்தது. இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் இதை மறுத்து அறிக்கைவெளியிட்டது.
இந் நிலையில் அந் நாட்டின் நாடாளுமன்றத் தலைவர் ராபின் குக் பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் இந்தச் செய்தியைஉறுதி செய்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இருநாடுகளுக்கும் ஆயுதம் விற்பது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பதால் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
பிரிட்டனின் வர்த்தகம் மற்றும் தொழில்துறைச் செயலாளர் பேட்ரிக்கா ஹெவிட் இந்தத் தடை குறித்த ஆணையில்கையெழுத்திட்டுள்ளார்.
பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா நாளை மறுதினம் இந்தியா வரும் நிலையில்விமானங்களை விற்கத் தடை போடப்பட்டுள்ளது.
அதே போல பாகிஸ்தானுக்கும் 6 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள ஆயுதங்களைத் தர பிரிட்டன் ஒப்பந்தம்செய்திருந்தது. அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை ஜேக் ஸ்ட்ரா இஸலாமாபாத் செல்கிறார். அங்கிருந்து அவர் டெல்லி வருகிறார்.
அப்போது இரு நாடுகளிடமும் ஆயுதம் தர மறுப்பது, விமானம் விற்க மறுப்பது குறித்து அவர் விளக்குவார்.
இந்த ஹாக் விமானங்களைத் தயாரிக்கும் பிரிட்டிஷ் ஏரோநாட்டிக்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம் கடும் நிதித்தட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு 1,500 பேரின் வேலை வாய்ப்பை காப்பாற்ற வேண்டுமானால் இந்தியாவிமானங்களை வாங்குவது தான் ஒரே வழி. இதனால் தான் இந்தியாவிடம் விமானம் வாங்க கெஞ்சியது பிரிட்டன்.
இப்போது பல்டி அடித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications