இன்று முதல் மருத்துவக் கல்லூரி விண்ணப்பங்கள் வினியோகம்
சென்னை:
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், பார்மஸி கல்லூரிகளில் சேர இன்று முதல்விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்குச் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.பிளஸ் டூ தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டன.
அதிக கட்-ஆப் மார்க்குகளுடன் காத்திருக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பம் தருவதற்கானநாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். இந் நிலையில் இன்று முதல் விண்ணப்பங்கள் தரப்படுகின்றன.
இந்த விண்ணப்பங்கள் வரும் ஜூன் மாதம் 8ம் தேதி வரை வழங்கப்படும். இதன் விலை ரூ. 500. பார்மசி கல்லூரிவிண்ணப்பங்கள் ரூ. 300.
தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு இது இலவசமாக வழங்கப்படும். தினமும் காலை 10 மணி முதல் மாலை5 மணி வரை இந்த விண்ணப்பங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், செலக்ஷன் கமிட்டியிடம் ஜூன் 10ம் தேதிக்குள் சமர்பிக்கவேண்டும்.
இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 5,000 விண்ணப்பங்கள் தரப்படவுள்ளன.
ஏற்கனவே பொறியியல் கல்லூரி விண்ணப்பங்கள் தரப்பட்டு வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications