தேசிய கீதத்துக்குப் பதில் ஓ... போடு
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரத்தில் ஒரு அரசி நிகழ்ச்சியில் தேசிய கீதத்துக்குப் பதிலாக ஓ..போடு பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது.
ரேஷனில் அரிசி வாங்க கூப்பன் முறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையை செயல்படுத்துவதுகுறித்த பயிற்சிக் கூட்டம் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகளைக் கொண்டு இத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக சுற்றுப் பகுதிபள்ளிகளின் ஆசிரியர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
மாவட்ட உதவி ஆணையர் (கலால் வரிப் பிரிவு) தலைமையில் இந்தப் பயிற்சி வகுப்பு நடந்தது. அவரே இத் திட்டம்குறித்து விளக்கமளித்தார்.
இவர் தவிர உணவு வினியோகத்துறையின் அதிகாரிகளும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பயிறிசி வகுப்பு முடிந்த பின்னர் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்துஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்பட அதிகாரிகள் அனைவரும் எழுந்து நின்றனர்.
தேசிய கீதத்துக்குக்காக டேப் ஆன் செய்யப்பட்டது. ஆனால், தேசிய கீதத்துக்குப் பதிலாக ஜெமின் படத்தின்ஓ...போடு பாடல் ஓடியது. இதையடுத்து செய்வதறியாது திகைத்தனர் அதிகாரிகள். அவர்கள் சுதாரிப்பதற்குள்பாடல் பாதிக்கும் மேல் ஒலித்துவிட்டது.
இதனால் ஆசிரியர்கள் பெரும அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் தேசிய கீதத்தைப் பாடி நிலைமையைசமாளித்தனர்.












Click it and Unblock the Notifications