சைதையில் திமுக தொண்டருக்கு அரிவாள் வெட்டு: பெரும் பதற்றம்
சென்னை:
டேப்பில் பதிவு செய்யப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் பேச்சைக் கேட்ட திமுக தொண்டருக்கு அரிவாள்வெட்டு விழுந்ததைத் தொடர்ந்து சைதாப்பேட்டை தொகுதியில் நேற்றும் பெரும் பதற்றம் நிலவியது.
நாளை தேர்தல் பிரச்சாரம் ஓயப் போகும் நிலையில், சைதாப்பேட்டை தொகுதியில் பிரச்சாரம் களை கட்டியுள்ளது.தமிழக முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ என்று முன்னணித் தலைவர்கள் அனைவரும் இத் தொகுதியில்தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாலை கோட்டூர்புரம் பகுதியில் கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்பகுதியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அவர் சென்றதும், சித்ரா நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (34) என்றதிமுக தொண்டர் தன்னுடைய வீட்டில் கருணாநிதியின் பதிவு செய்யப்பட்ட பேச்சை டேப்பில் போட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் சுப்பிரமணியின் வீட்டுக்குள் "திமுதிமு"வென்று நுழைந்தது.
வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் அங்கும் இங்குமாகத் தூக்கி எறிந்த அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்,சுப்பிரமணியை சராமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டனர்.
பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சுப்பிரமணி. அங்கு அவருக்குத்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கோட்டூர்புரம் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் திமுகவினர் புகார் தெரிவித்தனர். அதிமுகவினர் தான் இந்தச்சம்பவத்திற்குக் காரணம் என்று அவர்கள் தங்கள் புகாரில் கூறியுள்ளனர்.
போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications