எல்லையில் பதற்றம்: உஷார் நிலையில் கடற்படை
கொச்சி:
எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து, இந்தியா முழுவதிலும் கடற்படைஉஷார்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 14ம் தேதி காஷ்மீரில் ஜம்மூ அருகே கலுச்சாக் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியக் கடற்படை முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எந்நேரத்திலும் தீவிரவாதிகள்தாக்கலாம் என்பதால் அனைத்துத் துறைமுகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அனுமதி பெறாமல் யார் துறைமுகத்துக்குள் நுழைந்தாலும் சுட்டுத் தள்ளும்படி கடற்படையினருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகப்படும்படியான கப்பல்கள் மற்றும் படகுகளை 50 மீட்டர் தூரத்திலேயே நிறுத்தி சந்தேகப்பட்டால் சுட்டுத்தள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியக் கடற்படையினரும் கடலோரக் காவற்படையினரும் இரவு பகலாகக் கடல் பகுதிகளில்ரோந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஹெலிகாப்டர்கள், கடலிலும் தரையிலும் செல்லும் திறன் கொண்ட "ஹோவர்கிராப்ட்" ரக படகுகள் ஆகியவை தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றன.
கப்பலில் வரும் சரக்குகளை இறக்கும் இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த வாரம் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சில போர்க் கப்பல்கள் நாளைக்குள்குஜராத்தில் உள்ள கட்ச் வளைகுடாவைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு பாகிஸ்தானைக் குறி வைத்து அக்னி, பிருத்வி உள்ளிட்டஏவுகணைகள் காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடல் வழியாகப் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதற்காக இந்தப் போர்க் கப்பல்கள் கட்ச்வளைகுடாவை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications