தேர்தல் விதிமுறையை மீறியதாக ராமதாஸ் மீதும் வழக்கு
அச்சிறுப்பாக்கம்:
தேர்தல் விதிமுறையை மீறியதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரான டாக்டர் ராமதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அச்சிறுப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 8 கிராமங்களில் போலீசாரின் முன் அனுமதியின்றி ஒலிபெருக்கிகளுடன்சென்று பிரச்சாரம் செய்ததாக ராமதாஸ் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது வாகனங்களிலோ அல்லது பொதுக் கூட்டங்களிலோ ஒலிபெருக்கிகளைப்பயன்படுத்தினால் போலீசாரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னரே போலீசாரும் இதுகுறித்த ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
ஆனால் ராமதாஸ் பிரசாரத்தின்போது இது கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்துராமதாஸ் மீதும் அந்தப் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக தேர்தல் விதிமுறையை மீறி இரவு 10 மணிக்கு மேல் வாணியம்பாடியில் தேர்தல் பிரச்சாரம் செய்ததாகதிமுக தலைவர் கருணாநிதி மீது அவ்வூர் போலீசார் கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வரான ஜெயலலிதாவும் அவருடைய தலைமையிலான அதிமுகவினரும் தான் தேர்தல்விதிமுறைகளை மீறி வருகின்றனர் என்று கருணாநிதியும் ராமதாசும் தொடர்ந்து புகார் கூறி வந்துள்ளனர் என்பதும்குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications