அக்னி நட்சத்திரத்துக்கு "டாட்டா"
சென்னை:
கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரத்தின் கொடுமை இன்றுடன் முடிவடைகிறது.
கடந்த 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டஉயிர்களைப் பலி வாங்கியது. ஆந்திராவில் மட்டுமே 900க்கும் அதிமான மக்கள் இந்த ஆண்டு வெயிலுக்குப்பலியாயினர்.
தமிழகத்தில் இந்தக் கத்திரி வெயிலால் சென்னை மக்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் இரு நாட்களுக்கு மழை பெய்து தமிழக மக்களை மகிழ்வித்தது. ஆனால்அதைத் தொடர்ந்து அடித்த வெயிலால் மக்கள் பெரிதும் அவதியடைந்து விட்டனர்.
பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் புழுக்கம் காரணமாக தமிழக மக்கள் மிகவும் நொந்து விட்டனர். அதிலும் கடந்த14ம் தேதி எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக மின் தடை ஏற்படவே,சென்னை மாநகரமே அன்று இரவு வியர்வை வெள்ளத்தில் "குளித்தது".
அக்னி நட்சத்திரத்தின் கோரப் பிடியில் இருந்த இந்த 24 நாட்களில் அதிக பட்சமாக சென்னையில் 111 டிகிரிபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. புதுவையில் 109 டிகிரியும், வேலூரில் 108 டிகிரியும் கடலூரில் 107 டிகிரியும்பதிவானது.
சேலத்தில் வழக்கம் போல் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே 104 டிகிரி வெப்பமும் பதிவானது.
இதற்கிடையே அக்னி நட்சத்திரத்தின் போது மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, கன்னியாகுமரிபோன்ற தென்மாவட்டங்களில் நல்ல மழையும் பெய்தது. கன்னியாகுமரியில் அதிகபட்சமாக 16 செ.மீ. மழைபதிவானது.
இப்போதும் தென்மேற்குப் பருவமழை துவங்கி விட்டதாகத் தெரிகிறது. பெங்களூரில் கடந்த நான்கு நாட்களாகமாலை அல்லது இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications