நடிகர் ராஜ்குமார் கடத்தல்: நக்கீரன் கோபாலும் குற்றவாளியாக சேர்ப்பு
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபாலின் பெயரையும் போலீசார்சேர்த்துள்ளனர். அடுத்த 10 நாட்களுக்குள் அவர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும்உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டில் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்று கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குமேல் காட்டில் வைத்திருந்தான். பல முயற்சிகளுக்குப் பிறகு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்முயற்சியின் பேரில் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு வீரப்பனைத் தேடும் பணியும் ராஜ்குமார் கடத்தல்வழக்கும் வேகம் பெற்றன.
ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியத்தை ஏற்கனவே போலீசார் கைது செய்துள்ளனர்.தற்போது அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
இந்நிலையில் கோபாலையும் குற்றவாளிகள் பட்டியலில் போலீஸார் சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக கோபாலுக்குபோலீசார் அனுப்பியுள்ள சம்மனில், ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றவாளியாக உங்களது பெயர்சேர்க்கப்பட்டுள்ளது. எனவே பத்து நாட்களுக்குள் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தகவலை கோபாலின் வக்கீல் மோகன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
நக்கீரன் பத்திரிக்கையை ஜெயலலிதா அழிக்கப் பார்க்கிறார் என்றும் இதன் காரணமாகவே சிவசுப்ரமணியம் மீதுபொய்யான வழக்குப் போட்டுள்ள தமிழக அரசு தன் மீதும் வழக்குப் போட முயற்சித்து வருவதாக சமீபத்தில்தான்நக்கீரன் கோபால் தெரிவித்திருந்தார்.
சிவசுப்ரமணியம் மீதான வழக்கை கைவிடக் கோரி தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்களை பத்திரிக்கை நிருபர்கள்சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றவாளியாககோபாலும் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications