சைதை வாக்காளர் பட்டியல் குளறுபடி: கம்ப்யூட்டர் தான் காரணம் - தேர்தல் கமிஷன்
சென்னை:
சைதாப்பேட்டை வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிக்கு கம்ப்யூட்டர் கோளாறு தான் காரணம் என்றுதமிழக தலைமை தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி கூறினார்.
சைதாப்பேட்டை வாக்காளர் பட்டியலில் 5,463 பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அச்சிடப்பட்டுள்ளதாக திமுகதலைவர் கருணாநிதி கடந்த 24ம் தேதி புகார் கூறியிருந்தார்.
எனவே இந்த 5,463 கூடுதல் பெயர்களையும் உடனடியாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றுதமிழக தேர்தல் கமிஷனுக்கு புகார் கடிதம் ஒன்றையும் திமுக அனுப்பியுள்ளதாகவும் கருணாநிதி கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து நேற்று சாரங்கி நிருபர்களிடம் கூறியதாவது:
இதுகுறித்து திமுக மட்டுமில்லாமல் அதிமுகவிடமிருந்தும் எங்களுக்குப் புகார்கள் வந்தன. இதையடுத்துசைதாப்பேட்டை தொகுதியின் இறுதி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டது.
அப்போது அந்த வாக்காளர் பட்டியலில் 4,782 பெயர்கள் இரு இடங்களில் வந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளோம்.
கம்ப்யூட்டர் கோளாறு காரணமாகத் தான் இவ்வாறு ஒரே நபரின் பெயர்கள் இரு முறை அச்சிடப்பட்டுள்ளன.
ஆனால் வேட்புமனு கடைசியாகப் பெறப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடியும் வரை வாக்காளர் பட்டியலைத்திருத்த முடியாது.
எனவே இந்த 4,782 மறு பெயர்ப் பதிவுகள் கொண்ட பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு ஒரிஜினல் வாக்காளர்பட்டியலுடன் சேர்த்து வைத்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பப்படும்.
அந்த வாக்காளர்கள் ஒரு முறைக்கு மேல் ஓட்டுப் போட முடியாமல் தடுக்கப்படுவார்கள். வாக்குச் சாவடி தேர்தல்அதிகாரிகளுக்கு இதுகுறித்து அறிவுரைகளை வழங்கியுள்ளோம் என்றார் சாரங்கி
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications