பஞ்சாயத்து தலைவியின் கணவர் வெட்டிக் கொலை: அதிமுக பெண் எம்.எல்.ஏ. தலைமறைவு
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே ஒரு பஞ்சாயத்து தலைவியின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் அதிமுக பெண் எம்.எல்.ஏ. தன் குடும்பத்தினருடன்தலைமறைவாகி விட்டார்.
செங்கல்பட்டு அருகே உள்ள மேலமையூரின் பஞ்சாயத்துத் தலைவி மங்களம் (30) என்பவரின் கணவர் குட்டி (35).திருப்போரூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான கணிதா சம்பத்தும் மங்களமும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.
கடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் அதிமுக சார்பில் கணிதா சம்பத் போட்டியிட்டார். அதிமுகவில் டிக்கெட்கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்ட மங்களம், தேர்தலில் வெற்றி பெற்று பஞ்சாயத்துத் தலைவியாகவும்ஆகிவிட்டார்.
இதனால் மங்களத்தின் மீது கடும் கோபத்துடன் இருந்தார் கணிதா சம்பத். இருவருக்கும் இடையே அடிக்கடிதகராறுகளும் எழுவதுண்டு.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மீண்டும் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.அன்று இரவு குட்டி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சில மர்மஆசாமிகள் குட்டியை வழிமறித்து சரமாரியாக அவரை அரிவாளால் வெட்டினர். இதில் குட்டி சம்பவ இடத்திலேயேரத்த வெள்ளத்தில் பிணமானார்.
தன் கணவர் படுகொலைக்குக் காரணம் கணிதா சம்பத் தான் என்று போலீசில் மங்களம் புகார் கொடுத்துள்ளார்.ஆனால் கணிதா சம்பத் தன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் குட்டியை கொலை செய்தவர்களை போலீசார் பிடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் செங்கல்பட்டுமருத்துமனைக்கு முன்பாகக் கூடி சாலை மறியல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து மங்களம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கணிதா சம்பத் மீது போலீசார் கொலை வழக்குஒன்றைப் பதிவு செய்து, அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே மேலமையூரில் கடும் பதற்றம் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications