நெல்லையில் 2 விபத்துக்கள்: 3 பேர் பலி
திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே நடந்த 2 விபத்துக்களில் லாரி கிளீனர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
இம்மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் அருகே கொடுமடியாறு பகுதியில் மணல் அள்ளுவதற்காக 20தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
தளபதி சமுத்திரம் அருகே மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது லாரி திடீரென்று தலைகீழாகக்கவிழ்ந்தது.
இதில் செல்லத்துரை மற்றும் இசக்கியப்பன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். ஆனால் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் இறந்து விட்டனர்.
இவ்விபத்தில் 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் ஆற்றுப் பாலம் அருகே ஒரு லாரிநிறுத்தப்பட்டிருந்தது. அதனருகேயே அதன் டிரைவரும் கிளீனரும் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது மதுரையிலிருந்து ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளை ஏற்றி வந்து கொண்டிருந்த மற்றொரு லாரி, நின்றுகொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் லாரிக்கு அருகே நின்று கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த கிளீனர் முத்து (19) சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார்.
இந்த இரு விபத்துக்கள் குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications