மக்களுக்கு அமைச்சர்களே கொடுத்த பணம், மூக்குத்தி: இ. கம்யூ. புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாளை நடக்கவுள்ள இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஓட்டளிப்பதற்காக தமிழக அமைச்சர்களே நேரில் சென்றுபொதுமக்களுக்கு பணம், மூக்குத்தி, துணிமணிகள் போன்றவற்றைக் கொடுத்துள்ளனர் என்று இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர். நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த இடைத் தேர்தலில் அதிமுகவினர் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றனர்.
தங்கள் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று கோரி தமிழக அமைச்சர்களே வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்குபணம், மூக்குத்தி மற்றும் துணிமணிகளை வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதால் அக்கட்சி மீது தேர்தல் கமிஷன் கட்டாயம் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications