தாவூதுடன் தொடர்பு: இந்திய தாதா துபாயில் கைது
துபாய்:
மும்பையின் முன்னாள் தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான முத்தப்ப ரய் துபாயில் கைது செய்யப்பட்டுஇந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்தியாவில் குறிப்பாக கர்நாடகத்தில் முத்தப்பா ரய் மீது போதை மருந்துக் கடத்தல், ஆள் கடத்தல், கொலைகள்,கொலை முயற்சிகள் என பல வழக்குகள் உள்ளன. ஆனால், ரய்க்கும் தாவூதுக்கும் இடையில் கூட்டணி இருப்பதுதெரியவந்தபோது தான் மத்திய அரசு அதிர்ந்தது.
உடனே இவனை இந்தியா கொண்டு வர நடவடிக்கை சி.பி.ஐ. மூலமாக இன்டர்போல் உதவி நாடப்பட்டது.இன்டர்போல் உலகம் தழுவிய அளவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்ததையடுத்து இவனை துபாய் போலீஸ்கைது செய்தது.
பின்னர் சி.பி.ஐ. குழு துபாய் சென்று இவன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதை துபாய் போலீசிடம்விளக்கியது. இந்திய வெளியுறவுத்துறையும் துபாய் அரசுடன தொடர்பு கொண்டு பேசியது.
இதையடுத்து இவனை இந்தியாவிடம் ஒப்படைக்க துபாய் முன் வந்தது. நேற்று நள்ளிரவில் துபாயில் இருந்துடெல்லி கொண்டு வரப்பட்ட இவன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று பெங்களூர் கொண்டு வரப்பட்டான்.
மங்களூரைச் சேர்ந்த இவன் கர்நாகத்தில் தனது ராஜ்ஜியம் நடத்தி வந்தான். பின்னர் தப்பி துபாயில் தஞ்சம்புகுந்தான்.
இன்று காலை மிக பலத்த பாதுகாப்புடன் பெங்களூர் கொண்டு வரப்பட்ட இவனை சி.பி.ஐ. அதிகாரிகள் 7 மணிநேரம் விசாரித்தனர். பின்னர் இவன் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். சி.பி.ஐயிடம் இருந்துஇவனைப் பெற்றுக் கொண்ட பெங்களூர் நகர குற்றவியல் போலீசார் மிக பலத்த பாதுகாப்புடன் தங்கள்அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.
இன்று மாலை நீதிமன்றத்தில் இவனை ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைப்பார்கள் என்று தெரிகிறது.
இவனைக் காப்பாற்ற தாவூத் கும்பல் முயலலாம் என்பதால் பெங்களூர் மத்திய சிறையில் பலத்த பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவனது உயிருக்கு பிற கும்பல்களால் ஆபத்தும் உள்ளது. எனவே,இவனைப் பாதுகாப்பது பெங்களூர் போலீசாருக்கும் பெரும் தலைவலியாக இருக்கும்.
4 மாதங்களுக்கு முன்பு தான் தாவூதின் கும்பலைச் சேர்ந்த ஆப்தாப் அன்சாரியை இந்தியாவிடம் ஒப்படைத்ததுதுபாய். மேலும் பல தாவூத் கும்பல் ஆட்களின் பட்டியலை துபாய் போலீசிடம் இந்தியா தந்துள்ளது.
இவர்கள் இப்போது துபாயில் இருந்தாலும் தங்கள் கூட்டாளிகள் மூலம் தொடர்ந்து இந்தியாவில் ஆள் கடத்தல்,பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications