நண்பர் வீட்டில் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை
சென்னை:
கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்து வேலை தேடிக் கொண்டிருந்த வாலிபர் ஒருவர் அவருடைய நண்பர் வீட்டிற்குச் சென்றுதூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை விருகம்பாக்கம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். கம்ப்யூட்டர் அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளார். படித்தவுடன் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் சரியான வேலைஎதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ராஜ்குமாரின் நண்பர் ஜெயபிரகாஷ் தனது குடும்பத்துடன் ஊருக்குப் போயிருந்தார். போகும்போது தங்களது வீட்டுச் சாவியை ராஜ்குமாரிடம் கொடுத்து விட்டுச் சென்றனர்.
அதன் பிறகு ஜெயபிரகாஷ் வீட்டுக்குச் சென்ற ராஜ்குமார் அங்கு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ராஜ்குமாரைக் காணாத அவரது பெற்றோர், ஜெயபிரகாஷ் வீட்டில் இருக்கலாம் என்று கருதி அங்கு சென்றனர்.அங்கு அவர் தூக்கில் தொங்கியபடி கிடந்ததைப் பார்த்தும் பதறிப் போய் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
வேலை கிடைக்காதது தான் தற்கொலைக்கு காரணமா அல்லது வேறு காரணம் ஏதும் இருக்கிறதா என்று போலீசார்விசாரணை செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
