புலிகள் மீதான தடையை நீக்க இலங்கை புதிய நிபந்தனை
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தை நடப்பதற்கான ஒரு தேதியை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொண்டால் தான் அவர்கள்மீதான தடையை நீக்குவது பற்றிப் பரிசீலிப்போம் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
கடந்த 1998ல் புலிகள் மீது இலங்கை அரசு தடை விதித்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த தேர்தல் மூலம்அந்நாட்டின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அமைதிக்கான வாய்ப்புக்கள் வெகுவேகமாக வளரத் தொடங்கின.
டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவிலிருந்தே புலிகள் போர்நிறுத்தத்தை அறிவித்தனர். இதைத் தொடர்ந்து இலங்கைஅரசும் போர்நிறுத்தத்தை அறிவிக்கவே அங்கு குண்டுச் சத்தம் ஓய்ந்து அமைதி நிலவத் தொடங்கியது.
இரண்டு முறை போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு, அதன் பிறகு கடந்த பிப்ரவரி 22ம் தேதி இரு தரப்பினருக்கும்இடையே நிரந்தரப் போர்நிறுத்தம் கையெழுத்தாகி, அன்று நள்ளிரவிலிருந்தே அது அமலுக்கும் வந்து விட்டது.
இதையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மளமளவென்று நடைபெற்றன. பேச்சுக்கானமுயற்சிகளில் நார்வே குழுவினரும் வெகு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஜூன் மாதம் தாய்லாந்தில் பேச்சு நடக்கும்என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது.
ஆனால் இன்னும் தேதி மட்டும் தான் முடிவு செய்யப்படவில்லை. தங்கள் மீதான தடையை விலக்கினால் தான்பேச்சுவார்த்தைக்கே சம்மதிப்போம் என்று ஏற்கனவே புலிகள் கூறியுள்ளனர்.
இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கு இது தான் கடைசி வாய்ப்பு என்றும் இலங்கை அரசு இதைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினால் மிகவும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் புலிகள் சமீபத்தில் எச்சரிக்கைவிடுத்தனர்.
ஆனால் பேச்சு நடத்துவதற்கான தேதியைப் புலிகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவர்கள் மீதான தடையைவிலக்குவது குறித்து பரிசீலிப்போம் என்று கேபினட் செய்தித் தொடர்பாளரான பெய்ரிஸ் இன்று நிருபர்களிடம்கூறினார்.
பேச்சுவார்த்தைக்கான தேதியைக் குறிப்பது தொடர்பாகவும் அப்போது எதைப் பற்றியெல்லாம் பேசலாம் என்பதுகுறித்த நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதிலும் நார்வே தூதுக் குழுவினர் முழு முயற்சி எடுத்து வருகின்றனர் என்றும்பெய்ரிஸ் கூறினார்.
இனப் பிரச்சனை தொடர்பான அனைத்துமே பேச்சுவார்த்தையின் போது பேசப்பட வேண்டும் என்று இலங்கைஅரசு தொடர்ந்து கூறி வருவதாகவும் பெய்ரிஸ் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications