சைதையில் விதிகளை மீறும் திமுக, அதிமுக மீது தேர்தல் பார்வையாளர்கள் அதிருப்தி
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் பல இடங்களில் திமுகவும் அதிமுகவும் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டிருப்பதாக தேர்தல் பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சைதாப்பேட்டையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரம் முடிந்து விட்ட நிலையில்தொகுதியின் பல இடங்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டிருப்பதாக தேர்தல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு அவர்கள் அறிக்கை அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்துமாவட்ட தேர்தல் அதிகாரியான சென்னை மாவட்ட கலெக்டர் அப்துல் சலாமிடமும் பார்வையாளர்கள் விளக்கம்கேட்டுள்ளனர்.
முக்கியச் சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் போஸ்டர்கள், கட்அவுட்கள், தோரணங்கள் கட்டக் கூடாது என்று விதி உள்ளது.
ஆனால் அதை மீறி அதிமுகவினரும் திமுகவினரும் பல இடங்களில் வளைத்து வளைத்து போஸ்டர்களை ஒட்டி,கட் அவுட்டுகளைக் கட்டி, தோரணங்களைத் தொங்கவிட்டுள்ளனர் என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளதாகத்கூறப்படுகிறது.
ஒரு வேட்பாளர் ரூ.6 லட்சத்துக்கு மேல் செலவு செய்திருந்தால், அவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரதுபதவி பறிக்கப்பட்டு விடும். ஆனால் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள்செய்துள்ள செலவுகள் இந்த அளவைத் தாண்டி விடும் என்று ஒரு தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
விதிமுறைகளுக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ள கட் அவுட்கள், போஸ்டர்கள் மற்றும் தோரணங்களைஉடனடியாக அகற்றுமாறு சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வேலையைச் செய்ய வேண்டிய சென்னை மாநகராட்சி தொடர்ந்து அமைதி காத்துக் கொண்டிருப்பதுதேர்தல் பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications