எல்லை நோக்கி முன்னேறும் பாகிஸ்தான் படைகள்
இஸ்லாமாபாத்:
எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான்படைகள் படிப்படியாக முன்னேறிக் கொண்டு வருகின்றன.
இதற்காக ஆப்கானிஸ்தான் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் படையினரின் சில பிரிவுகள் அப்படியேஇந்திய எல்லையை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளனர். இந்தப் படைகள் எல்லையை நெருங்கி வருகின்றன.
பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியப் படையினர் எந்த நேரம் வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கலாம் என்பதால் தான் இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எல்லைப் பதற்றத்தைத் தொடர்ந்து சியாரோ லியோனில் அமைதிப் பணியில் ஈடுபட்டுள்ள 4,000 பாகிஸ்தான்படையினரை தங்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் படி ஐக்கிய நாடுகள் அமைப்பைக் கோரப் போவதாகக் கடந்தவாரமே அந்நாடு கூறியது குறிப்பிடத்தக்கது.
வாஜ்பாய் தலைமையில் அவசரக் கூட்டம்:
இதற்கிடையே டெல்லியில் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் உயர் மட்டக் கூட்டம் இன்று அவசரஅவசரமாகக் கூடியது.
உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் எல்லை நிலவரம் குறித்து வாஜ்பாய்ஆலோசனை நடத்தினார்.
வாஜ்பாயின் வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த முக்கியக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியாவை அணுகுண்டால் தாக்குவோம் என்று பாகிஸ்தான் வெளிப்படையாகவே மிரட்டியுள்ள நிலையில்இந்தக் கூட்டம் அவசர அவசரமாகக் கூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டியில் வாஜ்பாய் கலந்து கொள்ளவுள்ள மாநாட்டில் சில மாறுதல்கள்செய்யப்பட்டுள்ளதாக கூட்டம் முடிந்த பின் ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார். அல்மாட்டியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் வாஜ்பாயையும் முஷாரபையும் சந்தித்துப் பேச உள்ளார்.
ஆனால் இங்கு முஷாரபை வாஜ்பாய் சந்திக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்னாண்டசின் சிங்கப்பூர் பயணம் ரத்து:
இதற்கிடையே பெர்னாண்டஸ் தன்னுடைய சிங்கப்பூர் பயணத்தையும் ரத்து செய்து விட்டார். மூன்று நாள்பயணமாக அவர் நாளை சிங்கப்பூர் செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருவதையடுத்து அவர் தன்னுடைய பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications