ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட 2 கேரள பெண்கள் சென்னையில் மீட்பு
சென்னை:
ஆந்திராவில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாக கூறி விபசார விடுதியில் சேர்க்கப்பட இருந்த 2 கேரளபெண்களை சென்னை போலீசார் மீட்டனர்.
கேரள மாநிலம் மூவட்டுப்புழா பகுதியைச் சேர்ந்தவர் சோனியா மற்றும் எரிமேலியைச் சேர்ந்தவர் பென்சி.கோவையில் ஒரு பள்ளிக் கூடத்திற்கு ஆசிரியை வேலைக்கு ஆள் எடுப்பதாக கேரள பத்திரிக்கை ஒன்றில் சமீபத்தில்வந்த விளம்பரத்தைப் பார்த்த இருவரும் சான்றிதழ்களுடன் கோவைக்கு வந்தனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட இடத்தில் பள்ளிக் கூடம் எதுவும் இல்லை. இதனால் இருவரும் ஏமாற்றம் அடைந்தனர்.
என்ன செய்வது என்று இருவரும் விழித்துக் கொண்டிருந்த போது சுப்ப ரெட்டி என்ற நபர் அங்கு வந்தார். இருபெண்களையும் பார்த்த அவர் ஆந்திர மாநலம் நெல்லூரில் ஆசிரியை வேலை காலியாக இருப்பதாகவும், அங்குஅவர்களைச் சேர்த்து விடுவதாகவும் தெரிவித்தார்.
இதை நம்பிய இரு பெண்களும் அவருடன் ரயிலில் சென்னை வழியாக நெல்லூருக்குக் கிளம்பினர். நெல்லூருக்குசெல்ல ரயிலுக்காக சென்னையில் அவர்கள் காத்திருந்த போது ரயில்வே டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் மற்றும்இன்ஸ்பெக்டர் ஆரியமாலா ஆகியோருக்கு இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களை விசாரித்த போது இரு பெண்களையும் ஆந்திராவில் உள்ள ஒரு விபசார விடுதியில் விற்க சுப்ப ரெட்டிதிட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
உடனடியாக சோனியாவையும் பென்சியையும் மீட்ட போலீஸ் அதிகாரிகள், சுப்ப ரெட்டியைக் கைது செய்தனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications