அமைதியாக நடந்து முடிந்தது இடைத் தேர்தல்: 60 சதவீத வாக்குப்பதிவு
சென்னை:
ஆங்காங்கே நடந்த ஒரு சில சிறிய வன்முறைச் சம்பவங்களுடன் தமிழகத்தில் 3 சட்டசபைத் தொகுதிகளுக்கானஇடைத் தேர்தல் இன்று மாலை 5 மணியுடன் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த 3 தொகுதிகளிலும் சுமார் 60சதவீத வாக்குகள் பதிவாகின.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவுதொடங்கியது.
சைதாப்பேட்டையில் காலை 7 மணிக்கே மக்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். இத்தொகுதியில் வாக்குப்பதிவு சுறுசுறுப்பாக நடந்தது.
இத்தொகுதியில் தான் வன்முறை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கோட்டூர்புரத்தில் போலி ரேசன் கார்டுகள்மற்றும் போலி சாதிச் சான்றிதழ்களைக் காட்டி வாக்களித்தவர்களைத் தட்டிக் கேட்ட பொன்முடி அதிமுகவினரால்தாக்கப்பட்டார்.
இத்தொகுதிக்குட்பட்ட பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திமுக ஏஜென்டுகளை வாக்குச் சாவடிக்குள்செல்ல விடாமல் அதிமுகவினர் தடுத்ததையடுத்து திமுகவினர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னைமாநகரப் போலீஸ் கமிஷனர் விஜய்குமார் அங்கு வந்து அவர்களை அமைதிப்படுத்தினார்.
ஜெயராம் தெருவில் திமுகவும் அதிமுகவும் சேர்ந்து கொண்டு கள்ள ஓட்டுப் போடுவதாக மதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
அச்சிறுப்பாக்கம் மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் தேர்தல் மிக அமைதியாக நடந்தது. வாணியம்பாடியில்பெண்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப் போட்டனர்.
வாணியம்பாடியில் நண்பகல் 12 மணிக்கு பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து வாக்குப்பதிவு சிறிது நேரம்மந்தமாக நடைபெற்றது.
எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகின என்பது குறித்து தேர்தல் கமிஷன் இன்னும் சிறிது நேரத்தில்அறிவிக்கவுள்ளது.
மொத்தத்தில் இந்த இடைத் தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications