சைதையில் வன்முறையைத் தூண்ட திமுக சதி: ஜெ. புகார்
சென்னை:
இன்று நடைபெறும் இடைத் தேர்தலின் போது சைதாப்பேட்டை தொகுதியில் வன்முறையைத் தூண்டிவிட திமுகதலைவர் கருணாநிதி சதித் திட்டம் தீட்டியுள்ளார் என்று அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமானஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகளே அதிகம் நிலவி வருவதுகருணாநிதிக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே அதிமுகவிற்குச் சாதகமான இந்தச் சூழ்நிலையைக் குலைப்பதற்காக இத்தொகுதியில் பெரும்வன்முறையைத் தூண்டி விட கருணாநிதி திட்டம் தீட்டியுள்ளார்.
மேலும் பெண்கள், மத்திய தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்றுஓட்டுப் போடாமல் இருப்பதற்கும் கருணாநிதி திட்டம் போட்டுள்ளார்.
இவற்றைத் தவிர அனைத்து வாக்குச் சாவடிகளிலும் திமுகவினரைக் கொண்டு கள்ள ஓட்டுப் போடவும் கருணாநிதிசதித் திட்டம் தீட்டியுள்ளார்.
இவற்றுக்கான அனைத்து உத்தரவுகளும் திமுகவினருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எனக்குச் செய்திகள்வந்துள்ளன. வாக்குப்பதிவு தொடங்கிய ஓரிரு மணி நேரத்திற்குள்ளாகவே கள்ள ஓட்டுக்களைப் போடவும்திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
இப்படி இவர்களே திட்டமிட்டு வன்முறைகளைத் தூண்டி விட்டு இவர்களே அதைத் தொலைக்காட்சிப்படமெடுத்து மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பவும் திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
திமுகவினரின் இந்தச் சதி வலையில் அதிமுகவினரும் மக்களும் சிக்கிக் கொள்ளாமல் அமைதி காக்க வேண்டும்என்றும் தங்களுடைய வாக்குகளை உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றுஅவ்வறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மூன்றிலும் அதிமுகவுக்கே வெற்றி - நடிகர் தாமு:
இன்று நடைபெறும் மூன்று தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று நடிகரும்அதிமுக பேச்சாளருமான தாமு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை எங்கள் கோட்டை என்று சிலர் மனக் கோட்டை கட்டி வருகிறார்கள். இது பொய் என்று மக்கள் நிரூபிக்கப்போகிறார்கள். இதை சைதாப்பேட்டை பிரச்சாரத்தின் போது நான் நேரிலேயே கண்டேன்.
தமிழக மக்கள் புரட்சித் தலைவி ஜெயலலிதாவை இதயப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அவரையாராலும் அசைக்க முடியாது. 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்று கூறியுள்ளார் தாமு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications