கால்பந்து: டென்மார்க், ஜெர்மனி அணிகளுக்கு வெற்றி
உல்சன் (தென் கொரியா):
தென் கொரியாவின் உல்சன் நகரில் இன்று நடந்த உலகக் கோப்பை கால்பந்து-2000ன் முதல் சுற்றின் 2வதுபோட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கிடம் உருகுவே தோற்றுப் போனது.
இன்று இரு அணி வீரர்களும் மாறி மாறிப் பந்தை உதைத்துக் கொண்டிருந்தார்களே தவிர ஆட்டம் தொடங்கியவெகு நேரம் வரை யாருமே கோல் போடவில்லை.
இந்நிலையில் முதல் பாதி ஆட்டம் முடியப் போகும் போது சரியாக 45வது நிமிடத்தில் டென்மார்க்கின் ஜெஸ்பர்குரோங்க்ஜர் பாஸ் கொடுத்த பந்தை சக வீரரான ஜான் தல் தொமாஸ்ஸன் அற்புதமான கோலாக்கினார்.
ஆனால் டென்மார்க் வீரர்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய இரண்டாவதுநிமிடமே உருகுவே நாட்டின் டாரியோ ரோட்ரிக் அருமையான ஒரு கோலைப் போட்டு கோல் எண்ணிக்கையைச்சமன் செய்தார்.
அதன் பின்னர் இரு அணிகளும் மிகக் கடுமையாக மோதத் தொடங்கினர். இரு அணியினரும் தலா ஒரு கோல்போட்டிருப்பதால் அடுத்த கோலை யார் போடப் போகிறார்கள் என்ற பெரும் பரபரப்பில் போட்டி படுவிறுவிறுப்படைந்தது.
கடைசியில் ஆட்டம் முடிவதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன்னதாக தொமாஸ்ஸன் மீண்டும் ஒரு கோலைப் போட்டுடென்மார்க்கை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறச் செய்தார்.
இந்த இரு அணிகளும் இதற்கு முன் கடந்த 1986ல் மோதிய போதும் டென்மார்க்கே வெற்றி பெற்றது (ஸ்கேர்6-1).
அயர்லாந்து-காமரூன் ஆட்டம் டிரா:
இதற்கிடையே இன்று ஜப்பான் நகரான நிகிட்டாவில் நடைபெற்ற மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில்அயர்லாந்தும் காமரூனும் தலா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை டிரா செய்தன.
ஆட்டம் தொடங்கிய 22வது நிமிடத்திலேயே அயர்லாந்துக்கு கோல் போடுவதற்கான ஒரு அருமையான வாய்ப்புகிடைத்தது. மேலே பறந்து வந்த பந்தை அவ்வணியின் ராபி கியேன் தன் தலை மூலம் முட்டி கோலாக்கநினைத்தார். ஆனால் அது மயிரிழையில் கோல் கம்பத்துக்கு வெளியே சென்று விட்டது.
இதைத் தொடர்ந்து 39வது நிமிடத்தில் காமரூன் அணியைச் சேர்ந்த பேட்ரிக் எம்போமா தன்னுடைய அணிக்குமுதல் கோலைப் பெற்றுத் தந்தார்.
காமரூன் அணி ஒரு கோல் பெற்று முன்னிலை வகித்த போதிலும் ஆட்டத்தின் வேகம் குறையவில்லை.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது ஏழாவது நிமிடத்தில் அயர்லாந்தின் மாட் ஹாலந்து போட்ட கோல்மூலம் இரு அணியினரும் சமநிலை பெற்றனர்.
இதையடுத்து ஆட்டம் முடியும் வரை ஒரே பரபரப்பு நிலவியதே தவிர யாரும் கோல் போடவில்லை.
இதனால் எந்த அணிக்கும் வெற்றி-தோல்வி இல்லாமல் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
சவூதியை அபாரமாக வென்றது ஜெர்மனி:
இதற்கிடையே ஜப்பானின் சப்போரா நகரில் நடைபெற்ற இன்னுமொரு முதல் சுற்றுப் போட்டியில் சவூதிஅரேபியாவை 8-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியினர் அபாரமாகத் தோற்கடித்தனர்.
ஆட்ட நேரத் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனியின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. கிடைத்த அனைத்துவாய்ப்புக்களையும் ஜெர்மனி அணியினர் கோல்களாக மாற்றிக் கொண்டே இருந்தனர்.
ஆட்டத்தின் 20வது, 25வது, 40வது, 45வது, 68வது, 73வது, 83வது மற்றும் 90வது நிமிடங்களில் ஜெர்மனிவீரர்களின் கால்களும் தலைகளும் பந்தை கோலுக்குள் தள்ளின.
ஜெர்மனியின் 23 வயதே ஆன மிரோஸ்லாவ் க்ளோஸ் மிகவும் அபாரமாக ஆடி மூன்று கோல்களைப் போட்டார்.அவர் இதுவரை ஆடிய 13 போட்டிகளில் 11 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications