தீவிரவாதிகளை பாக். தடுக்க ஆரம்பித்துள்ளது: அமெரிக்கா
வாஷிங்டன்:
காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் நுழைவதை பாகிஸ்தான் தடுக்க ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பி வருவதாக வெளிப்படையாகவே பேசிய அமெரிக்கா, இப்போதுஅவர்களைத் தடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளதாகக் கூறியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் பி.பி.சிக்கு அளித்த பேட்டியில், தீவிரவாதிகள்இந்தியாவில் நுழைந்து வருவதை ஆதாரப்பூர்வமாகவே நாங்கள் தெரிந்து வைத்திருக்கிறோம்.
முதலில் பதற்றத்தைத் தணிக்குமாறு இரு நாடுளிடமும் கூறியுள்ளோம். காஷ்மீர் சட்டசபை, இந்திய நாடாளுமன்றம்ஆகியவற்றின் மீது தாக்குதல் நடப்பதற்கு முன் இருந்த அமைதி நிலை திரும்பினால் தான் பேச்சுவார்த்தைசாத்தியமாகும். எனவே, தயவுசெய்து அமைதி நிலையை ஏற்படுத்துமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் மூலம் காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இருநாடுகளும் எங்களுக்கு மிக நெருக்கமான நாடுகள் என்பதால் இக் கோரிக்கையை வைக்கிறோம்.
பாகிஸ்தானைத் தாக்கியே ஆக வேண்டும் என்பதில் இந்தியா தீவிரமாக உள்ளது தான் கவலை தருகிறது. மழைக்காலம் நெருங்கவுள்ளதால் முன்னதாகவே தாக்குதல் நடக்கலாம். பல விஷயங்களை மனதில் வைத்திருக்கிறதுஇந்தியா. எப்போது தாக்குவார்கள் என்பது தெரியவில்லை. முஷாரபுக்கு எவ்வளவு கால அவகாசம் தர இந்தியாதயாராக உள்ளது என்பதும் தெரியவில்லை.
அதே நேரத்தில் அரசியல்ரீதியில் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள இரு தரப்பினரும் ஆர்வத்துடன் உள்ளது தான்மகிழ்ச்சி தருகிறது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அனைத்து வகைகளிலும் உதவும் என்றார் காலின்பாவல்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பவுஷர் நிருபர்களிடம் கூறுகையில்,
தீவிரவாதிகள் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து வருவது உண்மை தான். அவர்களைத் தடுக்க தனதுபடையினருக்கு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் உத்தரவிட்டுள்ளதாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது.
தீவிரவாதிகள் நுழைவது நின்றுவிட்டதா என்பதை அமெரிக்கா கூர்ந்து நோக்கும். தீவிரவாதிகளைத் தடுக்ககொஞ்சம் காலம் எடுக்கும்.
இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது ஒருமுன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். இது இந்தியாவுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை அல்ல என்பதைதெளிவுபடுத்த விரும்புகிறோம்.
இந்த விவகாரம் குறித்து பிரிட்டனுடனும், ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னானடனும் ஆலோசித்துவருகிறோம் என்றார்.
இந்தியா எதிர்ப்பு:
இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது தேவையில்லாததுஎன இந்தியா கூறியுள்ளது.
நார்த் கரோலினாவில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் லலித் மான்சிங் கூறுகையில், எங்களுக்கும்அமெரிக்காவுக்கும் எதிரி ஒன்று தான். அது தீவிரவாதம்.
அணு குண்டு பயத்தினால் அமெரிக்க தூதரகத்தினரை திரும்பி அழைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதுதேவையில்லாதது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications