உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை
டெல்லி:
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயரவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய பெட்ரோலியத் துறைஅமைச்சரான ராம் நாயக் நாளை (திங்கள்கிழமை) அறிவிப்பார்.
பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.2.50ம், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.1.50ம் உயர்த்தப்படுகின்றன.
கடந்த மூன்று மாதங்களாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்ததைத் தொடர்ந்துஇந்த விலை உயர்வுகள் அறிவிக்கப்படவுள்ளன.
பெட்ரோலியப் பொருட்களின் கலால் வரியை மாற்றி அமைப்பதன் மூலம் விலை உயர்வின் கடுமையைக் குறைக்கமத்திய அரசு தீர்மானித்துள்ளது.
அமலுக்கு வந்தது தபால் கட்டண உயர்வு:
இதற்கிடையே நேற்று முதல் தபால் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
தபால் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில்கூறப்பட்டிருந்தது. ஜூன் 1ம் தேதி முதல் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டது.
அதன் படி நேற்று முதல் தபால் கட்டணங்கள் உயர்ந்தன.












Click it and Unblock the Notifications