தேர்தல் முறைகேடு: திமுக, போலீசாரிடம் அதிகாரிகள் விசாரணை
சென்னை:
சைதாப்பேட்டையில் தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுஇன்று தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தவுள்ளது.
சைதாப்பேட்டை தொகுதியில் கடந்த 31ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது வரலாறு காணாத அளவுக்கு தேர்தல் முறைகேடுகள்நடந்துள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து தமிழக தேர்தல் கமிஷனின் 3 பார்வையாளகள் விசாரித்து அறிக்கை அனுப்பினர்.
இதில் திருப்தியடையாத மத்திய தேர்தல் ஆணையம் மீண்டும் அது குறித்து விசாரிக்க அச்சிரப்பாக்கம் மற்றும் வாணியம்பாடி தொகுதிதேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த பூர்ஜியா, சந்தோஷ் குமார் ஆகிய இரண்டு மத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குஉத்தரவிட்டது.
இந்த இருவகும் ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்து தனது விசாரணையைத் தொடங்கினர். முதலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிசாரங்கியுடன் இக்குழு ஆலோசனை நடத்தியது. புகார்கள் குறித்து கேட்டறிந்தது.
போலீசாரிடம் விசாரணை:
இதன் பிறகு இன்று காலை காவல்துறை அதிகாரிகள், தேர்தல் பணியில் இருந்த மாநகராட்சி அதிகாரிகளை தலைமைச் செயலகத்துக்குநேரடியாக வரவழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பொன்முடி சந்திப்பு:
சைதாப்பேட்டை திமுக தலைமை பூத் ஏஜெண்டான முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அந்தத் தொகுதியின்திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் ஆகியோரையும் இந்த அதிகாரிகள் நேரில் வரவழைத்து விசாரித்தனர்.
பிற கட்சிகளின் தேர்தல் ஏஜென்டுகள், வாக்குச் சாவடி அதிகாரிகள், வாக்காளர்களிடம் கேள்விகள் கேட்டு விசாரித்த பிறகு இறுதிஅறிக்கையை தலைமைத் தேர்தல் கமிஷனுக்கு இந்த இரு அதிகாரிகளும் அனுப்பி வைப்பர்.
அதன் பிறகே சைதையில் மறு தேர்தல் நடத்தப்படுமா, இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும். இதனால் இங்கு வாக்குஎண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications