இந்திய தாக்குதலில் 6 பாக் வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
பாகிஸ்தானிய வீரர்கள் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 6 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.மேலும் பாகிஸ்தானியர்களின் பதுங்குக் குழிகளும் அழிக்கப்பட்டன.
நேற்று பாகிஸ்தானிய வீரர்கள் இந்திய எல்லையை நோக்கி கடும் பீரங்கிப் படைகளால் தாக்கினர். இவர்களின் தாக்குதல் வேட்டைராணுவமுகாமை நோக்கியும் மக்களின் குடியிருப்புப் பகுதியை நோக்கியும் இருந்தது.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு, இந்தியா பதில் தாக்குதல் நடத்திய போது பாகிஸ்தான் வீரர்கள் 6 பேர் மாண்டனர். மேலும்பாகிஸ்தானியர்களின் பதுங்குக் குழிகளும் அழிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications