சபதம் முடித்தோம்: திருமாவளவன்
பாண்டிச்சேரி:
அச்சிரப்பாக்கம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி தோல்வியடைய வேண்டும் என்று அத்தொகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் சபதம்எடுத்தனர். அதேபோல செய்து காட்டியுள்ளனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு தனிப்பட்ட முறையில் எந்த செல்வாக்கும் இல்லைஎன்பது இடைத் தேர்தல் மூலம் தெரிந்து விட்டது. அதிமுகவையும், திமுகவையும் சார்ந்துதான் அது செயல்பட முடியும்.
இரு கூட்டணிகளில் ஏதாவது ஒன்றில் இருந்து கொண்டுதான் இத்தனை காலம் அது குளிர் காய்ந்து வந்துள்ளது என்பதை மக்கள் புரிந்துகொண்டு விட்டார்கள்.
திமுகவின் ஓட்டைத்தான் அச்சிரப்பாக்கத்தில் பாமக பெற்றுள்ளது. பாமக வெற்றி பெறக் கூடாது என்று அச்சிரப்பாக்கம் தாழ்த்தப்பட்டமக்கள் சபதம் எடுத்திருந்தனர். அது நிறைவேறியுள்ளது.
தேர்தல் நடந்த 3 தொகுதிகளிலும் அதிமுகவினர் பெரும் முறைகேடுகளைச் செய்தனர். 3 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்தப்படவேண்டும்.
தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்துகளான பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலித்கள் உயர் ஜாதியினரால்மிரட்டப்பட்டனர். இதனால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமா கடிதங்களை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது தவறு.இதைக் கண்டித்து ஜூன் 20ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றார் அவர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications