கருணாநிதி போட்ட தப்புக் கணக்கு: பா.ஜ.க. விமர்சனம்
திருச்செந்தூர்:
இடைத் தேர்தலில் திமுக தப்புக் கணக்குப் போட்டு விட்டது. இதனால்தான் அவர்கள் இடைத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர்என்று பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
திருச்செந்தூர் அருகே நாதன்கிணறு என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில்,
இடைத் தேர்தல் என்பது தேவையா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. தேர்தல் என்பது ஒரு கட்சியின் பிரதிதியைதேர்ந்தெடுப்பதற்காக நடப்பது.
எனவே ஒரு கட்சியின் எம்.எல்.ஏ. இறந்து விட்டால், அதே கட்சியின் சார்பில் மற்றொரு நபரை பிரதிநிதியாக நியமிக்ககட்சிகளுக்கு அதிகாரம் தர வேண்டும். சுயேச்சை எம்.எல்.ஏ. இறந்தால் மட்டுமே இடைத் தேர்தல் நடத்த வேண்டும்.இதற்கேற்றவாறு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தொகுதியில் 50க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடப்பது இதுவரைநடந்திராத ஒன்று. சைதாப்பேட்டையில் அந்த வரலாறு நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கே இது களங்கம்.
பாரதீய ஜனதா இல்லாமலேயே ஜெயித்து விடலாம் என்று திமுக தப்புக் கணக்குப் போட்டது. அதன் விளைவு, வாணியம்பாடியில்கூட அதனால் வெற்றி பெற முடியவில்லை. கருணாநிதி போட்ட கணக்கு தப்பாகி விட்டது.
திமுக நடந்து கொள்ளும் விதத்தைப் பொருத்துத்தான் எதிர்காலத்தில் அக்கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைப்பது குறித்து முடிவுசெய்யப்படும் என்றார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த கணேசன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையும், சந்தனக் கடத்தல் வீரப்பனையும்ஒப்பிட்டுப் பேசுவது தவறானது என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications