சென்னையில் மர்ம நபர் தப்பியோட்டம்: வெடிகுண்டு வைக்க வந்தவனா?
சென்னை:
சென்னை வடபழனியில் மர்ம நபர் ஒருவன் குழி தோண்டி ஒரு பார்சலைப் புதைக்க முயன்றான். ஆனால்பொதுமக்கள் கூடியதைக் கண்டவுடன் அவன் ஓடி விட்டான்.
வடபழனியில் உள்ள சிவன் கோவிலின் பின்புறம் ஒரு குப்பை மேடு உள்ளது. நேற்று காலை சுமார் 10மணியளவில் அங்கு ஒருவன் உட்கார்ந்து குழி தோண்டிக் கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு பார்சல் இருந்தது.
அவன் வெடிகுண்டுகள் அடங்கிய பார்சலைத் தான் புதைக்கப் போகிறான் என்று அப்பகுதி மக்கள் சந்தேகத்துடன்அவனை நோக்கி வந்தனர். ஆனால் கூட்டம் கூடி வருவதைப் பார்த்தவுடன் அந்த நபர் பார்சலை அங்கேயேஅரையும் குறையுமாகப் புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
இதையடுத்து பொதுமக்களின் சந்தேகம் வலுக்கவே போலீசாருக்குத் தகவல் பறந்தது. விரைந்து வந்த போலீசார்அந்த மர்ம நபர் விட்டுச் சென்ற பார்சலைக் கைப்பற்றினர்.
அந்தப் பார்சலைப் பிரித்து பார்த்த போது அதில் இரும்புத் துகள்களும் சாம்பல் பவுடரும் இருந்தது தெரிய வந்தது.பார்சலில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. எங்களிடம் சிக்கும் நிலை வந்ததால் வெடிகுண்டை எடுத்துக் கொண்டுவேறு பொருள்களை மட்டும் அங்கேயே புதைத்துவிட்டு அந்த நபர் ஓடிவிட்டான் என பொது மக்கள்கூறுகின்றனர்.
ஆனால், பொதுமக்களைப் பயமுறுத்துவதற்காகவே வெடிகுண்டு வைப்பது மாதிரி யாரோ சிலர் சும்மா இதுபோன்ற விஷமத்தனமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications