இந்தியா தயாரித்துள்ள போர் விமானம்: வெற்றிகரமாய் பறந்தது
பெங்களூர்:
இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு போர் விமானமான எல்.சி.ஏ. (லைட் காம்பேட் ஏர்கிராப்ட்)ரகத்தைச் சேர்ந்த இரண்டாவது விமானம் இன்று வெற்றிகரமான விண்ணில் பறக்கவிடப்பட்டுசோதனையிடப்பட்டது.
பெங்களூரில் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முன்னிலையில் இன்று காலை 11.50 மணிக்கு எல்.சி.ஏ.விண்ணில் பறந்தது. சுமார் அரை மணி நேரம் வானத்தில் வட்டமடித்த எல்.சி.ஏ. பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
எல்.சி.ஏ. திட்டத்தின் இயக்குனர் கோட்டா ஹரிநாராயணா உள்ளிட்ட மூத்த விஞ்ஞானகள் இந்த சோதனையைப்பார்வையிட்டனர். இந்த விமானத்தை விங் கமாண்டர் டி.பானர்ஜி இயக்கிச் சென்றார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் தான் அப்போதையை டி.ஆர்.டி.ஓ. இயக்குனரும் இந்த போர் விமானத் தயாரிப்பில்முக்கிய பங்கு வகித்தவருமான ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மற்றும் பெர்னாண்டஸ் முன்னிலையில் முதல்முறையாகஎல்.சி.ஏ. பறக்கவிடப்பட்டு சோதனையிடப்பட்டது.
இதுவரை 12 முறை சோதனைரீதியில் இந்த விமானம் பறந்துள்ளது.












Click it and Unblock the Notifications